பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் பிரபலமாகியவர் வினுஷா. இந்த தொடரில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. பல ரசிகர்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் வினுஷா, அதற்கு முக்கிய காரணம் அவரின் இயல்பான நடிப்பு ஆகும். இந்த தொடருக்கு பிறகு இவர் நடித்த பாரதி கண்ணம்மா 2 சீரியல் எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.

இதனை தொடர்ந்து இவருக்கான அடுத்த கதைக்களம் அமையாததால், மீண்டும் சீரியல் வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்.இந்நிலையில் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் வினுஷா. இந்த புகைப்படங்கள் இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களிடம் இன்ப அதிர்ச்சியை கொடுத்து உள்ளது.
முழுவதும் தனது தோற்றத்தை மாற்றி வெறித்தனமான லுக்கில் மாறியுள்ளார் வினுஷா. இவரின் இந்த புகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் , ஆளே மாறிவிட்டதாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் அவர் விரைவில் நாடகத்தில் நடிக்க வேண்டும் எனவும் அவரது ரசிகர்கள் கமெண்டுகளில் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.