சுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ’! டிரெண்ட் ஆகும் சிவகார்த்திகேயனின் ஹீரோ டிரைலர்!!

சுயமாக சிந்திப்பவனே ‛சூப்பர் ஹீரோ'! டிரெண்ட் ஆகும் சிவகார்த்திகேயனின் ஹீரோ டிரைலர்!! 1

“இரும்புத்திரை” படத்தை அடுத்து மித்ரன் இயக்கி இருக்கிற படம் ‛ஹீரோ’. நாயகனாக சிவகார்த்திகேயனும், நாயகியாக கல்யாணி பிரியதர்ஷனும் நடித்துள்ளனர். அர்ஜூன் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். வில்லனாக ஹிந்தி நடிகர் அபே தியோல் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

படத்திற்கு ‛ஹீரோ’ என தலைப்பு வைக்கப்பட்டதாலும், பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவகார்த்திகேயன் தோற்றம் ‛சூப்பர் ஹீரோ’ போன்று இருந்ததாலும் இது ‛சூப்பர் ஹீரோ’ சம்பந்தப்பட்ட கதை என்று அனைவராலும் பேசப்பட்டது. ஆனால் தற்போது டிரைலரை பார்க்கும்போது அப்படி தோன்றவில்லை.

விளம்பரம்

2.17 நிமிடம் ஓடும் இந்த டிரைலரில் இளம் வயதில் சூப்பர் ஹீரோவாக தன்னை மாற்ற துடிக்கும் துடிக்கும் சிவகார்த்திகேயன், வாலிப வயதில் கல்யாணி பிரியதர்ஷனை காதலிக்கும் ரோமியோவாக, போலி சான்றிதழ் தயார் செய்து தரும் நபராக நடித்திருக்கிறார். பின் அர்ஜூனின் ஆலோசனையை ஏற்று நல்லவராக மாறி சூப்பர் ஹீரோ போன்று சாகசம் செய்வது மாதிரியான காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. விஞ்ஞான தொழில்நுட்பங்களை விவசாயத்திலும் எப்படி பயன்படுத்தலாம் என்பது போன்று காட்சிகள் உள்ளன.

தொடர்புடையவை  Super Singer Priya Jerson திருமண வரவேற்பில் கலந்துகொண்ட Super Singer நட்சத்திரங்கள்..!

அதோடு, ‛‛நான் படிப்பை வைத்து வியாபாரம் செய்பவன் இல்லை, படிக்கிறவனை வைத்து வியாபாரம் செய்பவன், ஐடியாக்களை காலி பண்ணுவது தான் என் வேலை…” என பஞ்ச் பேசியபடி தன்னுடைய வில்லத்தனம் காட்டுபவராக அபே தியோல்.

விளம்பரம்

இவரை எதிர்க்கும் நபராக, ‛‛ஒரு மனிதனை அழித்து விடலாம், அவனுக்கு வைத்த சிலையை அழித்து விடலாம், ஆனால் அவனின் சிந்தனையையும், சித்தாந்தத்தையும் அழிக்கவே முடியாது…” என பஞ்ச் பேசியபடி நல்லவர் கதாபாத்திரத்தில் அர்ஜூன்.

இவருக்கு பக்க பலமாக, ‛‛எத்தனையோ பேர் என்கிட்ட சூப்பர் ஹீரோ கிடையாது என சொல்லி இருக்காங்க. ஆனால் இப்ப சொல்றேன், சுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ…” என பஞ்ச் பேசியபடி சாகசம் செய்யும் ஹீரோவாக சிவகார்த்திகேயன் இடம் பெறும் காட்சிகளும் டிரைலரில் உள்ளன.

விளம்பரம்

மொத்தத்தில், சமூகத்தில் கல்வியை மையப்படுத்தி நடக்கும் வியாபாரத்தையும், ஏழை மாணவர்களின் சுயசிந்தனைகள் எப்படி நசுக்கப்படுகின்றன என்பதையும் அழுத்தம் திருத்தமாக சொல்ல வருகிறது இந்த ‛ஹீரோ’. டிச.,20ல் படம் திரைக்கு வருகிறது.

விளம்பரம்

Leave a Comment