செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவுக்கு வீட்டிலேயே நடந்த வளைகாப்பு.! நண்பர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்.!

காதலித்து, திருமணம் செய்து, கர்ப்பம் ஆக்கிவிட்டு பின்னர் கழற்றி விட்டதால், நண்பர்கள் சேர்ந்து செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு வளைகாப்பு செய்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் வைரல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்னவ். சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்கிற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் கர்ப்பமாக இருப்பதாக instagram பக்கத்தில் அறிவித்திருந்தார் திவ்யா ஸ்ரீதர். இதன் பின்னர் தான் இருவருக்கும் சண்டை தொடங்கியது. வயிற்றில் பிள்ளை இருக்கும் நிலையில் தன் வயிற்றில் அர்னவ் எட்டி உதைத்து விட்டார் என்று மருத்துவமனையில் இருந்து பேட்டி அளித்திருந்தார் திவ்யா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவுக்கு வீட்டிலேயே நடந்த வளைகாப்பு.! நண்பர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்.! 1

விளம்பரம்

இதன் பின்னர் சண்டை பூதாகரமானது. அர்னவ் தன்னை கொடுமைப் படுத்துவதாகவும், செல்லமா சீரியல் நடிகையுடன் சேர்ந்து கொண்டு தன்னை ஆபாசமாக பேசி அடித்து துன்புறுத்துவதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை அளித்திருந்தார் திவ்யா. மேலும் தன்னை மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டு விட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்களை அளிப்பதற்கு தன்னிடம் பேரம் பேசியதாகவும் திவ்யா குற்றம் சாட்டினார். இதையெல்லாம் மறுத்த அர்னவ், தான் அவ்வாறு செய்யவில்லை என்றும், திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் குழந்தை இருப்பதை மறைத்திருக்கிறார் என்றும் பதிலுக்கு குற்றம் சாட்டினார். பின்னர் ஒரு கட்டத்தில் திவ்யா உண்மைகளை நிரூபிக்க ஜெயிலுக்கு சென்று ஜாமீனில் திரும்பி வந்துள்ளார் அர்னவ்.

தொடர்புடையவை  ஜூலி: எங்க அம்மா வீடு இருந்த கிராமத்துல பாத்ரூம் கூட கிடையாது | Biggboss Ultimate Promo3

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யாவுக்கு வீட்டிலேயே நடந்த வளைகாப்பு.! நண்பர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்.! 3

விளம்பரம்

திவ்யாவை முஸ்லிமாக மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டு, கர்ப்பம் ஆக்கிவிட்டு தற்போது நாடகம் ஆடிவரும் அர்னவ் மீது பல பெண்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அவரின் உண்மை முகத்தை மீடியாக்களில் பேசினர். இருந்த போதும் அர்னவ் தொடர்ந்து விஜய் டிவியில் செல்லமா சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் திவ்யா ஸ்ரீதருக்கு ஆதரவு இல்லாமல் இருந்து வந்தது. மதம் மாறியதால் பெற்றோர்களும் திவ்யாவுடன் பேசுவதில்லை. இந்த நிலையில் திவ்யாவிற்கு அந்த சீரியலின் நடிகர்கள் அனைவரும் சேர்ந்து வளைகாப்பு செய்துள்ளனர். அந்த நெகிழ்ச்சியான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் திவ்யா. அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்

Leave a Comment