Categories: சினிமா

‘ஷாஜகான்’ பட ஹீரோயினை ஞாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க.! சமீபத்திய புகைப்படங்கள்.!

வெளியிட்டது

திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்கள் பலரும் திருமணத்திற்குப் பிறகு திரைத் துறையை விட்டு விலகி குடும்பத்துடன் செட்டில் ஆவது வழக்கமாக இருக்கிறது.

'ஷாஜகான்' பட ஹீரோயினை ஞாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க.! சமீபத்திய புகைப்படங்கள்.! 1

அந்த வகையில் தற்போது தமிழ் திரையுலகில் சில படங்களில் நடித்த நடிகை ரிச்சா பல்லட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

நடிகை ரிச்சா பல்லட் ஒரு மாடல் ஆவார். தெலுங்கு படம் ஒன்றில் நடித்ததன் மூலமாக திரையுலகில் நடிகையாக அறிமுகமான அவர், அதன் பின்னர் தமிழில் ‘ஷாஜகான்’ படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து ‘காதல் கிறுக்கன்’, ‘சம்திங் சம்திங்’, ‘யாகாவராயினும் நாகாக்க’ போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார்.

2016ம் ஆண்டு தெலுங்கு படம் ஒன்றில் நடித்த அவர், அதன் பின்னர் பெரிய அளவில் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. கடைசியாக 2020ம் ஆண்டு ‘யுவர் ஹானர்’ என்கிற ஹிந்தி வலைதளத் தொடரில் நடித்திருந்தார்.

இவருக்கு 2011ம் ஆண்டு ஹிமன்ஷு பஜாஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகனு இருக்கிறார்.

திருமணத்திற்கு பின்னர் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

 

ஆள் அடையாளமே தெரியாமல் அவர் மாறிப் போய் இருக்கும் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், ‘ஷாஜகானில்’ நடித்த நடிகையா இது? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்