CSK இளம் வீரருடன் காதல்.? உண்மைகளை போட்டு உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்து வரும் நடிகை ஒருவர், சிஎஸ்கே அணியில் விளையாடி வரும் கிரிக்கெட் வீரரை காதலிப்பதாக தகவல் பரவிய நிலையில், தற்போது அது குறித்து அந்த நடிகையே விளக்கம் அளித்து இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் டிஆர்பியில் நம்பர் ஒன் சீரியலாக விளங்கி வருகிறது. இந்த சீரியலில் பாக்யாவின் கடைசி மகளாக இனியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நேஹா.

CSK இளம் வீரருடன் காதல்.? உண்மைகளை போட்டு உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.! 1

விளம்பரம்

 

கேரளாவை சேர்ந்த இவர், ‘பிள்ளை நிலா’, ‘வாணி ராணி’, ‘பைரவி’ போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். ‘வாணி ராணி’ சீரியலில் ராதிகாவின் மகளாக நடித்த அவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்து சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. இவருக்கு ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் நேஹா கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பதிரனாவும், நேஹாவும் காதலித்து வருவதாக தகவல் கசிந்த நிலையில், பதிரனா குறித்து இன்ஸ்டாகிராமில் நேஹா ஸ்டோரி போடவும் இந்த தகவலை ரசிகர்கள் உறுதிப்படுத்தினர். ஆனால் இது குறித்து எதுவும் சொல்லாமல் தொடர்ந்து நேஹா அமைதி காத்து வந்தார். சில நாட்களாக இந்த தகவல் வைரலாகி வரும் நிலையில், தற்போது பேட்டி ஒன்றில் நேஹா விளக்கம் அளித்திருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  தலைகீழாக மாறும் வாக்குகள்.! முன்னேறி செல்லும் டைட்டில் வின்னர் சரவண விக்ரம்.! பின்தங்கிய போட்டியாளர்

CSK இளம் வீரருடன் காதல்.? உண்மைகளை போட்டு உடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.! 3

அவர் கூறும் பொழுது, “எனக்கு கிரிக்கெட் பார்க்கும் பழக்கமே இல்லை. ஒருமுறை சூட்டிங் ஸ்பாட்டில் என் அருகில் இருந்தவர் சிஎஸ்கே போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பதிரனா ஃபேன் என்பதால் அவர் பற்றி என்னிடம் கூறிக் கொண்டிருந்தார். அவர் இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததை நானும் என்னுடைய ஸ்டோரியில் பகிர்ந்தேன். அந்த பதிவுக்கு பின்னர் நானும் பதிரனாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவத் தொடங்கின. அதை கேட்கும் பொழுது ஜாலியாக இருந்ததால் நானும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னுடைய வாழ்க்கையில் நான் பதிரனாவை நேரில் கூட பார்த்ததில்லை. என்னுடைய வாழ்க்கையில் ஒருமுறை காதல் தோல்வியை சந்தித்து இருக்கிறேன். அதனால் தான் மிகவும் நொறுங்கிப் போய் கண்ணீர் விட்டு அழுதேன்” என்று அவர் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: SS Music

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment