தற்போதெல்லாம் youtube வருமானத்திற்காக சிலர் வைரல் கன்டென்டுகளை தயார் செய்து, அதன் மூலம் பிரபலமாகும் மோகத்தில் பலர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் பிரபலமான ஒருவர் தான் திவ்யா. கார்த்திக் தன்னுடைய காதலர், தன்னை விட்டு பிரிந்து விட்டார் என்று ஒரு பொய்யை சொல்லி,”மிஸ் யூ டா கார்த்திக்” என்ற வாசகத்தின் மூலமாக பிரபலமானவர் தான் திவ்யா. தனது சாதிய பெயரை தனக்கு பின்னால் அடையாளமாக வைத்துக் கொண்டு இருக்கும் இவர் சமீபத்தில் மற்றொரு youtubeராக இருக்கும் தேனி ஈஸ்வர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். எந்த நிலையில் சமீபத்தில் இந்தத் திருமணம் காசுக்காக கன்டென்டுக்காக செய்யப்பட்டது என்று சொல்லி விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்க்கு பேட்டி அளிக்க வந்திருந்த திவ்யாவை நிகழ்ச்சி நெறியாளராக இருந்த ஷகிலா திட்டி அந்த பேட்டியை நிறைவு செய்து இருக்கிறார். காசு கொடுத்தா என்ன வேண்டுமானாலும் செய்வியா? உனக்கெல்லாம் அறிவே இல்லையா? என்றெல்லாம் காட்டமாக ஷகிலா பேசியிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டிக் டாக் செயலி வருகைக்குப் பின்னர் தமிழகத்தில் இதுபோன்ற யூடியூபர்களின் பெருக்கம் அதிகம் ஆகிவிட்டது. youtube-ல் வருமானம் வரும் என்பதால் சில வைரல் கண்டெண்டுகளை தயார் செய்து போட ஆரம்பித்தனர். அதன்படி தற்போது திவ்யா தேனியைச் சேர்ந்த ஈஸ்வர் என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். ஈஸ்வரனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் திவ்யா. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சியில் ஷகிலா ஒரு நிகழ்ச்சியின் நெறியாளராக இருந்து வருகிறார். அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த திவ்யாவை ஷகிலா வெளுத்து வாங்கி விட்டார். தன் மேல் கேஸ் இருக்கிறது, தான் எம்எஸ்சி படித்திருக்கிறேன், எனக்கு யாரும் வேலை தர வில்லை, எனவே எனக்கு பணம் வேண்டும். தேனி காவல. நிலையத்திற்கு சென்று வர வேண்டும், லாயருக்கு பணம் கொடுக்க வேண்டும். எனவே கண்டன்டுக்காக தேனி ஈஸ்வர் தன்னை அணுகினார்.
எனக்கும் பண தேவை இருந்ததால் அவரை திருமணம் செய்து கொள்வது போல கன்டென்ட் செய்தோம். விஜய் அஜித் நடிப்பது போல நீயும் இந்த கல்யாணத்தில் வந்து நடி என்று ஈஸ்வர் தன்னிடம் கூறினார். தனக்கும் பண தேவை இருந்ததால் நானும் நடித்தேன். அதிலிருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் வரை சம்பாதித்தேன் என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது கடுப்பான ஷகிலா காசு கொடுத்தா என்ன வேணாலும் பண்ணுவியா.? கன்டென்ட் வேண்டும் என்பதற்காக எதை கொடுத்தாலும் சாப்பிடுவியா? என்று கோபமடைந்தார். பின்னர் தாங்கள் பொறுப்புத் துறப்பை போட்ட பின்பு தான் இந்த வீடியோவை பதிவிட்டோம். ஆனால் எங்கு போனாலும் எனக்கும் ஈஸ்வருக்கும் திருமணமானதாக தன்னை கேட்கிறார்கள் என்று திவ்யா பேசிக் கொண்டிருந்தார். அப்போது கடுப்பான ஷகிலா, அதான் பொறுப்பு துறப்பு போட்டு தானே வீடியோ பதிவிட்டாய்? அப்புறம் என்ன மயி*க்கு இங்கே பேச வந்தாய்? என்று கோபத்துடன் பேசினார்.
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த ஷகிலா இதுபோல் நபரை எல்லாம் எதற்காக இந்த நிகழ்ச்சிக்கு கூட்டிக்கொண்டு வருகிறீர்கள்? என்று பேசி நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் கோபத்தை வெளிப்படுத்தினார். பின்னர் மக்கள் ஏமாந்து போய் தங்களுடைய வீடியோக்களை பார்ப்பதாக திவ்யா தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஹே..!ஷட் அப் என்று சொல்லிவிட்டு இதுபோல நேரத்தை வீணடித்ததற்காக மன்னிப்பு கூறுகிறேன். இந்த பேட்டி நல்ல முறையில் அமையவில்லை என்று சொல்லி திவ்யாவையும் எழுந்து வெளியே போகுமாறு கூறினார். இதனால் உடைந்து போன திவ்யா அழத் தொடங்கினார். அத்துடன் ஷகிலா அந்த பேட்டியை நிறைவு செய்தார் அந்த வீடியோவை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Facebook Video Embed Code Credits: Galatta Media