பன்னி என்ன செய்யும் தெரியுமா? பன்னி என விமர்சித்த ப்ளூ சட்டையை வெளுத்து வாங்கிய GP முத்து.!

தான் நடித்த படம் குறித்தும், தன்னையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்த ப்ளூ சட்டை மாறனை தற்போது ஜி பி முத்து கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல விமர்சகராக இருக்கும் ப்ளூ சட்டை மாறன் திரை பிரபலங்கள் தொடங்கி அரசியல் பிரபலங்கள் என அனைவரையும் விமர்சித்து வருகிறார். சில சமயங்களில் இவரது விமர்சனம் சிறிது எல்லை மீறி சென்று தனிப்பட்ட முறையில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஜிபி முத்து பற்றி ப்ளூசட்டை மாறன் கூறிய விமர்சனம் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. தன்னை விமர்சித்ததால் பதிலுக்கு ப்ளூ சட்டை மாறனை விமர்சித்து தற்போது ஜி பி முத்து வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். டிக்டாக் மூலமாக பிரபலமாகி பின்னர் youtube வீடியோவில் தனக்கு ஆபாசமாக கடிதம் எழுதுபவர்களை “செத்தப் பயலே, நாரப் பயலே” என்று திட்டி அதன் மூலமாக பிரபலமானவர்தான் ஜி பி முத்து. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பன்னி என்ன செய்யும் தெரியுமா? பன்னி என விமர்சித்த ப்ளூ சட்டையை வெளுத்து வாங்கிய GP முத்து.! 1

விளம்பரம்

தற்போது ஜி பி முத்து பிக்பாஸ், குக் வித் கோமாளி என்று மிகப்பெரிய ரியாலிட்டி ஷோக்களில் பங்கெடுத்து வருகிறார். தற்போது படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான பம்பர் என்கிற திரைப்படம் தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்த படத்தை செல்வகுமார் என்கிற இயக்குனர் இயக்க வெற்றி மற்றும் ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஜி பி முத்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எந்த படம் வந்தாலும் அதை பார்த்துவிட்டு விமர்சனம் கூறும் ப்ளூ சட்டை வழக்கம்போல பம்பர் படத்திற்கும் விமர்சனங்களை கூறினார். அப்போது ஜிபி முத்துவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் படம் நன்றாக இருக்கிறது, ஆனால் ஒரு பன்னி ஆங்காங்கே குறுக்கே சென்று வருகிறது, அந்தப் பன்னியை அப்போதே அடித்துக் கொன்றிருந்தால் இந்த படம் இன்னும் அருமையாக இருந்திருக்கும் என்று ஜிபி முத்துவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் கூறியிருந்தார்.

தொடர்புடையவை  மீண்டும் Form-க்கு வந்து ஆட்டத்தில் கலக்கும் Prasanth..! தளபதி விஜய் வெளியிட்ட அந்தகன் படத்தின் First Single இதோ..!

பன்னி என்ன செய்யும் தெரியுமா? பன்னி என விமர்சித்த ப்ளூ சட்டையை வெளுத்து வாங்கிய GP முத்து.! 3

விளம்பரம்

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிபி முத்து ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதில் நான் தான் அந்த படத்தில் அடிக்கடி வந்து செல்வேன், மறைமுகமாக ப்ளூ சட்டை மாறன் தன்னைத்தான் விமர்சித்து இருக்கிறார். பன்றி கடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? அப்படியே கொத்தோடு புடுங்கிவிடும்? பன்னி மோசமானது, அது போகிறவரை அமைதியாக போகும், ஆனால் அது கடிக்க ஆரம்பித்தால் இருக்கிற எல்லாத்தையும் தின்னுவிடும். அதுதான் பன்னியோட புத்தி என்று சொல்லி பதிலடி கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment