ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் “யாரடி நீ மோகினி”. இதில் முதன்மை கதாபாத்திரங்களில் நக்ஷத்ராவும், சைத்ரா ரெட்டியும் நடித்து இருந்தனர். துணை கதாபாத்திரத்தில் ஸ்ரீநிதி நடித்து இருந்தார். நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருந்த இந்த தொடர், அண்மையில் முடிவடைந்தது.

இதில் நடித்ததன் மூலம் மூவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. மிக நெருக்கமான நட்பில் இருந்து வந்துள்ளனர். நடிகை சைத்ராவிற்கு அண்மையில் திருமணம் முடிந்தது. மூவரும் வெவ்வேறு தொடர் நடிக்க ஆரம்பித்துள்ளனர். நக்ஷத்திரா கலர்ஸ் தமிழில் “வள்ளி திருமணம்” என்ற தொடரிலும், சைத்ரா நடிகர் அஜித்தின் “வலிமை” படத்திலும், இப்பொது சன் டிவியில் “கயல்” தொடரிலும் நடித்து வருகிறார்.
ஸ்ரீநிதி மட்டும் அப்பப்போ சில தொடர்களில் தலை காட்டி வருகிறார். வலிமை படத்தின் போதும் சர்ச்சை கூறிய வகையில் பேசி அஜித் ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டார். பின்னர் அழுது கொண்டே, என்னை மன்னித்து விடுங்கள், நான் அவ்வாறு கூறவில்லை என இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டார். அடுத்து அம்மாவுடன் சண்டை வீடியோ, அம்மா இவரை சபித்து வெளியிடும் வீடியோ என பலவேறு தேவையற்ற விடீயோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
திடீரென நடுவில் சிம்பு என்னை லவ் பண்றார், என்னை அவருடன் சேர்த்து வையுங்கள் என அதிர்ச்சியை கிளப்பினார். அதற்கும் சாட்சிகள் இருக்கு, நான் பொய் கூற வில்லை, என சொல்லி 3,4 நாட்களாக கலாட்டா செய்து கொண்டிருந்தார். நடிகர் சிம்புவின் தந்தை இயக்குனர் டி.ராஜேந்தர் உடல் நிலை மோசமாக அப்போது இவரு பேசினால் பெரிய பிரெச்சனையால் மாட்டிக்கொள்வோம் என அறிந்து ஒரு 2 நாட்கள் அம்மணி சும்மா இருந்தார்.
அந்த சம்பவங்கள் சில நாட்கள் சமூகவலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது அனைத்து விதமான பிரச்சனைகளிலும் இருந்து தற்போது மீண்டு வந்து கொண்டிருக்கும் ஸ்ரீநிதி, நடிகை ஷகீலா தொகுத்து வழங்கும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பல்வேறு வகையிலான விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாக மனந்திறந்து பேசியுள்ளார். அந்த வீடியோவில் தனக்கிருந்த போதை பழக்கம், காதல் முறிவுகள், அம்மாவின் தற்போதைய நிலைமை, முக்கியமாக நடிகர் சிம்புவின் சர்ச்சை பற்றி பேசியுள்ளார்.
நிறைய விஷயங்கள் பேசியிருந்தாலும், “சிம்பு எனக்கு அண்ணா மாதிரி, அப்படி என பண்ணேன்’னு தெரியல..இத நீங்க சிம்பு அண்ணா பாப்பேன்கலான்னு தெரில..ஆனா பாத்தீங்கன்னா I’m so sorry” என கூறி பகிர் கிளப்பியுள்ளார். அவர் சொன்னதை கேட்டு ஷகீலாவும் கொஞ்சம் ஆடிப்போனார். இந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Video Courtesy – Behindwoods O2