விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய பெண் போட்டியாளர் ஒருவர் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அவரின் பதிவுக்கு பின்னால் இந்த வாரம் நீங்கள் தான் வெளியேறி விட்டீர்களா? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரசிகர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோக்களில் முதலிடம் பிடித்திருக்கிறது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி. சமையலை காமெடியுடன் கூடிய நிகழ்ச்சியாக இது பிரதிபலிப்பதால், பலருக்கும் இந்த நிகழ்ச்சி விருப்பமான ஒன்றாக இருந்து வருகிறது.

நான்கு சீசன்களை முடித்து ஐந்தாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு முந்தைய சீசன்கள் போல வரவேற்பு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு காரணம் பல கோமாளிகள் மற்றும் நடுவர்வெங்கடேஷ் பட் ஆகியோர் இந்த சீசனை விட்டு விலகியதுதான். தற்போது ஐந்தாவது சீசன் நான்காவது வாரத்தை தொட்டிருக்கிறது. இந்த சீசனில் பிரியங்கா, திவ்யா துரைசாமி, இர்ஃபான், வசந்த் வசி, ஸ்ரீகாந்த் தேவா, ஷாலின் சோயா போன்ற பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் முதல் எலிமினேஷன் நடந்திருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா மற்றும் ஷாலின் சோயா இருவரும் கடைசி இடங்களை பிடித்திருந்தனர்.
இந்த நிலையில் ஷாலினி சோயா வெளியேறி இருப்பதாக உறுதியாகி இருக்கிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றைக் பகிர்ந்த அவர், “20 ஆண்டுகளாக திரைத்துறையில் கிடைக்காத ஒரு புகழ் இந்த ஒரு ரியாலிட்டி ஷோ மூலமாக கிடைத்துள்ளது. சமூக ஊடகங்களின் சக்தியை உண்மையாக உணர்ந்தேன். உங்கள் அனைவரையும் என் வாழ்நாளில் எப்போதும் மறக்க மாட்டேன். இந்த பயணத்தையும் கைவிட மாட்டேன். உங்களுடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் என்னுடைய இறுக்கமான Hugs” என்று பகிர்ந்திருக்கிறார். இதன் மூலம் அவர் வெளியேறி இருப்பது உறுதியாகி உள்ளது.