இன்ஸ்டாகிராமில் இணைந்த ஷாலினி.! முதல் பதிவே தல அஜித்துடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படம் தான்

வெளியிட்டது

அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி தற்போது instagram பக்கத்தில் இணைந்திருக்கிறார். இணைந்த உடனேயே அவர் தனது கணவர் அஜித்துடன் இருக்கும் ரொமான்டிக்கான புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அவர் சமூக வலைதளங்களில் இணைந்த சில நிமிடங்களிலேயே 50 ஆயிரம் மக்கள் அவரை பின்தொடர ஆரம்பித்துள்ளனர். தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் ஷாலினி. இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆவது வழக்கமாக இருக்கிறது. அமர்க்களம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அஜித் மற்றும் ஷாலினி இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2000 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இன்ஸ்டாகிராமில் இணைந்த ஷாலினி.! முதல் பதிவே தல அஜித்துடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படம் தான் 1

அன்று தொடங்கி இன்று வரை காதல் ஜோடிகளாக வலம் வரும் இவர்களின் காதலுக்கு சாட்சியாக இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கின்றனர். மூத்த மகள் பெயர் அனோஷ்கா. இரண்டாவது மகன் பெயர் ஆத்விக். திருமணத்திற்கு பிறகு படங்களின் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திய ஷாலினி, தனது குடும்பத்துடன் தனது பிள்ளைகளுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவ்வபோது திரைப்படங்கள் பார்க்க வருவது, படங்களில் ப்ரோமோஷன்களுக்கு வருவது என்று மட்டுமே ஷாலினியை வெளியில் பார்க்க முடிகிறது. மற்ற நேரங்களில் அவர் பெரிதாக வெளியில் வருவதில்லை. அஜித்தும் சரி, ஷாலினியும் சரி இது நாள் வரையிலும் எந்த விதமான சமூக வலைத்தளங்களிலும் தங்களுக்கு என கணக்கு வைத்தது இல்லை.

இந்த நிலையில் ஷாலினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்து இருக்கிறார். சமீபத்தில் ஷாலினி தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதற்காக அஜித் அவரை மிகப் பெரிய நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று கேக் வெட்டி சர்ப்ரைஸ் செய்திருந்தார். அங்கு அஜித்துடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார் ஷாலினி. துணிவு படம் நெருங்கும் வேளையில் அவர் இதுபோல் இன்ஸ்டாகிராமில் கணக்கை துவங்கியிருப்பது அஜித் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இனி அடிக்கடி குடும்ப புகைப்படங்களையும், அஜீத்தின் புகைப்படங்களையும் பார்க்க முடியும் என்று அவர்கள் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்