அஜித் மனைவியின் தங்கை ஷாமிலி தற்போது தனது ஓவியங்களை சர்வதேச கண்காட்சியில் படைத்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக தமிழ் துறையில் தனது வாழ்க்கையை ஆரம்பித்த ஷாமிலி, தற்போது ஓவியக் கலைஞராக தனித்துவம்மான அடையாளத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகர் அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினியின் தங்கை தான் ஷாமிலி. இவர் சிறுவயதில் பலப்படங்களில் நடித்திருக்கிறார்.

சில வருடங்களாக ஓவியத்தில் ஆர்வமுள்ள இவர், தற்போது தனது படைப்புகளை சர்வதேச ஓவிய கண்காட்சியில் இடம்பெற வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஹீரோயினாக நடிக்க துவங்கிய ஷாமிலி தமிழ் மற்றும் தெலுங்குகளில் சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அவரது படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால் திரைத்துறையில் இருந்து விலகி, ஓவியம் மற்றும் நாட்டிய கலைகளை ஆர்வத்துடன் கற்கத் தொடங்கி இருக்கிறார்.
ஓவியத்துறையில் மேதையாக இருக்கும் ஏவி இளங்கோவனினிடம் மாணவியாக சேர்ந்து இவர், ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார் .தற்போது இடைவிடாத முயற்சி மற்றும் உழைப்பினால் அவர் பல ஓவியப் படைப்புகளை உருவாக்கி இருக்கிறார். அவரின் ஓவிய படைப்புகள் தற்போது துபாயில் நடந்த சர்வதேச ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்று இருக்கின்றன.
பெண்கள் மற்றும் சுதந்திரமான ஆன்மாவை வெளிப்படுத்தும் விதமாக பல ஓவியங்களை வரைந்து இருக்கிறார் ஷாமிலி. மேலும் ஒரு கூட்டுக்குள் அடைபட்டு இருக்கும் பெண்கள் அனைத்தையும் உடைத்து இலட்சியத்தை நோக்கி பறக்க வேண்டும் என்கிற ரீதியில் பல ஓவியங்களை வரைந்து இருக்கிறார்.
பெங்களூருவில் இருக்கும் சித்திரகலா பரிஷத் என்கிற கலைக்கூடத்தில் 2019 ஆம் ஆண்டு தான் வரைந்த ஓவியங்களை கண்காட்சிக்கு வைத்திருந்தார் ஷாமிலி. தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு சென்னையில் இருக்கும் வெண்பா கேலரி என்கிற கலைக்கூடத்தில் தன்னுடைய படைப்புகளை காட்சியாக வைத்திருந்தார். இந்த நிலையில் துபாயில் “வேர்ல்ட் ஆர்ட் துபாய்” என்கிற சர்வதேச ஓவிய கலைக்கூடத்தில் தனது ஓவியங்களை காட்சிப்படுத்தி இருக்கிறார்.
உலகம் முழுவதிலும் இருந்து அறுபது நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்கள் ஓவியங்களை இங்கு காட்சி படுத்தி இருந்தனர். மார்ச் ஒன்பதாம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி மார்ச் 12ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் ஷாமிலியின் ஓவிய திறமையை பலரும் பாராட்டி அங்குள்ள குறிப்புகளில் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.
ஷாமிலியின் ஓவியக் கலையை பார்த்த அஜித் மற்றும் ஷாமிலி ரசிகர்கள் இவருக்குள் இப்படி ஒரு திறமையா? என்று அவரை வியந்து பாராட்டி வருகின்றனர்.