Categories: சினிமா

ஷாருக்கான வச்சி அட்லீ இயக்கும் மாஸான ஒரு Pan India Movie – ஜவான் டீஸர்

வெளியிட்டது

பிரபல இயக்குனநர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் படத்தின் தலைப்பு தற்போது வெளியாகியுள்ளது. ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்கனராக அறிமுகம் ஆனவர் அட்லீ. பின்னர் தெறி, மெர்சல், பிகல் போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவர் தற்போது பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளார். முண்ணனி நடிகரான ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஷாருக்கானின் எந்த படமும் வெளியாகாததால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கான வச்சி அட்லீ இயக்கும் மாஸான ஒரு Pan India Movie - ஜவான் டீஸர் 1

இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்திலும், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படம் நயன்தாராவின் முதல் ஹிந்தி படமாகும். இதில் CBI அதிகாரியாக நயன்தாரா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரியாமணி, யோகிபாபு போன்ற தமிழ் பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஏற்க்குறைய முடிந்துவிட்டதாகவும், இறுதிக்கட்டத்திற்கான ஷூட்டிங் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்கு முதலில் லயன் எனப்பெயரிடப்பட்டதாகவும், பின்னர் படத்தின் சென்சார் பணிகள் முடிந்த பின்னர் படத்தின் பெயர் ஜவான் என மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

2020ம் ஆண்டே படத்திற்கான பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா தாக்கம், ஷாருக்கான் மகன் கைது என படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிவடைந்த நிலையில் படத்திற்கு ஜவான் என்று பெயரிடப்பட்டு அது குறித்து அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் படம் 2023 ஜனவரியில் வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் வீடியோ மிரட்டலாக வெளியாகியுள்ளது. தலை, கை, கால்களில் கட்டுப் போட்டு ஷாருக்கான் இருப்பது போல் உள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..

Video Courtesy: Red Chillies Entertainment

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்