Categories: சினிமா

ஹாலிவுட் தரத்தில் உருவாகி இருக்கும் ஷாருக் கானின் “பதான்” தமிழ் டீசர் வெளியானது.!

வெளியிட்டது

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஷாருக்கான் நடிப்பில் தற்போது வெளியாக இருக்கும் படம் தான் பதான். இன்று ஷாருக்கானின் 57வது பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் போன்ற பல முண்ணனி நட்சத்திரத்திங்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஷாருக்கான் கடைசியாக கதாநாயகனாக நடித்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. கீழே உள்ள டீசர் வீடியோவை பார்க்கவும்.

ஹாலிவுட் தரத்தில் உருவாகி இருக்கும் ஷாருக் கானின் "பதான்" தமிழ் டீசர் வெளியானது.! 1

எனவே அவர் நான்காண்டுகளுக்குப் பிறகு கதாநாயகனாக நடித்து வெளிவர உள்ள படம் என்பதால் இந்த படத்திற்கு மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்தப் படம் முடிந்த பின்பு அட்லியின் அடுத்த படமான ஜவான் படத்திலும் நடித்து வருகிறார் ஷாருக். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். தற்போது பதான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த டீசர் இடம் பெற்றுள்ளது. பான் இந்தியா படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. ஏற்கனவே தமிழில் வாரிசு, துணிவு போன்ற படங்கள் பொங்கலுக்கு வெளியாகியுள்ள நிலையில் இந்தப் படமும் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளது.

படத்தின் டீசரை வெளியிட்ட ஜான் ஆபிரகாம் தமிழில் பதான் டீசரை பாருங்கள். ஜனவரி 25ஆம் தேதி தியேட்டரில் சென்று பாருங்கள். இந்தி மற்றும் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியிடப்படுகிறது என்று தமிழில் ட்வீட் செய்திருக்கிறார். ஹாலிவுட் படத்திற்கு இணையாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டீசரை நீங்களும் காண..! Watch the below video..!

YouTube Video Code Embed Credits: YRF

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்