ஏடிகே தற்போது வெளியிட்டு இருக்கும் ஊர் கிழவி என்ற ஆல்பம் பாடலுக்கு தற்போது ஷிவின் மரண குத்தாட்டம் போட்டிருக்கிறார். அதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது லைக்குகளை குவித்து வருகிறது. பிக் பாஸ் சீசன் சிக்ஸில் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷிவின் கணேசன். இவர் திருநங்கை ஆவார். பல தடைகளை மீறி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த ஷிவின் கணேசனுக்கு மக்களின் ஆதரவு பெருக்கியது. பிக் பாஸ் சீசன் 5 தொடங்கி திருநங்கை போட்டியாளர் ஒருவரை கலந்து கொள்ள வைப்பதில் பிக் பாஸ் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் சீசன் 5ல் நமீதா மாரிமுத்துவை களம் இறக்கி இருந்தனர். ஆனால் சில காரணங்களால் நமீதா அந்த போட்டியில் தொடர முடியாமல் பாதியிலேயே வெளியேறி இருந்தார். அதன் பின்னர் சீசன் சிக்ஸிலும் ஒரு திருநங்கை போட்டியாளரை உள்ளே களமிறக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சீசன் 6-லும் ஷிவின் கணேசன் என்கிற திருநங்கையை களம் இறக்கி இருந்தனர். இவரும் ஆரம்பம் முதலில் நன்றாக விளையாடி வந்தார். குறுகிய காலத்திலேயே வீட்டில் இருக்கும் அனைவருடனும் நட்பாக பழகி அனைவருக்கும் பிடித்தமான போட்டியாளராக மாறிப் போனார். பலரும் ஷிவினை ஏற்றுக்கொண்டனர். குறிப்பாக ரட்சிதா மகாலட்சுமி தனது தங்கையாகவே அவரை ஏற்றுக் கொண்டார். ரட்சிதாவின் தாயார் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பொழுது அவரும் உங்கள் இருவரை பார்க்க அக்கா தங்கைகள் போல் இருப்பதாக கூறினார் .பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் ராம் ஷிவின், ஏடிகே, விக்ரமன், ரட்சிதா, மகேஸ்வரி என அனைவரும் ஒரே கேங்காக இருக்கின்றனர். தொடர்ந்து சந்தித்துக் கொள்ளும் அவர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். தற்போது ஏடிகேற்கு பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்டுள்ள ஊர் கிழவி என்ற பட்டத்தை வைத்து அவர் ஆல்பம் பாடல் ஒன்றை தயாரித்திருக்கிறார்.
தற்போது அந்த ஆல்பம் பாடலுக்கு ஷிவின் குத்தாட்டம் போட்டு அதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O