கியூட்டான ஸ்மைல போட்டு சாச்சிட்டாளே.! நம்ம கண்ணம்மாவா இது? செம்ம Cute ஆ இருக்காங்களே.!

பாரதி கண்ணம்மா சீரியலின் பழைய கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி ஹரிப்பிரியன் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ பல லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மாடலிங் துறையில் இருந்து குறும்படங்களில் நடித்து வந்தவர் நடிகை ரோஷினி ஹரிப்பிரியன். இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்கிற சீரியலில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகிய தொடங்கிய அந்த சீரியலில் கண்ணம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் ரோஷினி. பாரதி கண்ணம்மா சீரியலின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பெருமை ரோஷிணியை சாரும். ஒளிபரப்பான சில வாரங்களிலேயே விஜய் டிவியின் முன்னணி தொடராகவும் மக்கள் விரும்பி பார்க்கும் தொடராகவும் பாரதி கண்ணம்மா மாறியது என்று சொன்னால் அது ரோஷினியின் எதார்த்தமான நடிப்பிற்கு கிடைத்த வெற்றியே ஆகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கியூட்டான ஸ்மைல போட்டு சாச்சிட்டாளே.! நம்ம கண்ணம்மாவா இது? செம்ம Cute ஆ இருக்காங்களே.! 1
கருப்பாக இருக்கும் மருமகளை கொடுமைப்படுத்தும் மாமியார் என்கிற ஒற்றை கதைக்களத்துடன் தான் இந்த கதை ஆரம்பித்தது. பின்னர் போகப் போக இந்த கதைக்களம் எங்கேயோ சென்றுவிட்டது. தனது மருமகள் கருப்பாக இருப்பதால் மாமியார் வெறுத்து ஒதுக்கும் கதையில் ரோஷினி நடித்துக் கொண்டிருந்தார். அப்போது கருப்பாக இருக்கும் பெண்கள் பலரும் உங்களைப் பார்த்து நாங்கள் பெருமை கொள்கிறோம், கருப்பு என்பது நிறமே தவிர அது ஒருவரின் குணாதிசயங்களை நிர்ணயிக்காது, நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள் என்று ரோஷினிக்கு தொடர்ந்து மக்களின் ஆதரவு பெருகிக்கொண்டே இருந்தது. இதை ரோஷினியே பல இடங்களில் கூறியிருக்கிறார். எங்கு வெளியில் சென்றாலும் பல பெண்கள் தன்னிடம் வந்து இவ்வாறு கூறுவதாக ரோஷினி பெருமிதத்துடன் கூறி வந்தார். இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திடீரென ஒரு நாள் தொடரில் இருந்து விலகி அதிர்ச்சி கொடுத்திருந்தார் ரோஷினி.

விளம்பரம்
தொடர்புடையவை  இந்த வாரம் வெளியேற போறது கிரேஸ்-ஆ, வித்யுவா? தாமு சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியில் குக்குகள்

கியூட்டான ஸ்மைல போட்டு சாச்சிட்டாளே.! நம்ம கண்ணம்மாவா இது? செம்ம Cute ஆ இருக்காங்களே.! 3
பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவர் பாதியிலேயே வெளியேறினார். இந்த நிலையில் தற்போது ரோஷினி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பலருக்கும் தெரியாத நிலையில் ஆல்பம் பாடல்களில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் கூட ஒரு ஆல்பம் பாடலில் நடித்து அதை வெளியிட்டு இருந்தார் ரோஷினி. தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அதில் தற்போது புடவையுடன் ஒரு வீடியோ ஒன்றை பதிவேற்றி இருக்கிறார். செம க்யூடாக இருக்கும் அந்த வீடியோவிற்கு லட்சக்கணக்கான பார்வையாளர்களும் லைக்களும் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment