Categories: சினிமா

முகம் உதடு எல்லாம் வீங்கி போய் விகாரமாக மாறிய ஸ்ருதி ஹாசன்.! என்னாச்சு அவருக்கு?

வெளியிட்டது

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு திடீரென முகம், உதடு, கண் பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் முகமே மாறி விகாரமாக மாறி போய் இருக்கிறார் ஸ்ருதி ஹாசன். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். உலகநாயகன் கலஹாசனின் மூத்த மகள்தான் ஸ்ருதிஹாசன். குழந்தையாக இருக்கும் போதே தேவர்மகன் படத்தில் நடித்து அசத்தியிருப்பார். பின்னர் 2011ம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக கேஜிஎஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

முகம் உதடு எல்லாம் வீங்கி போய் விகாரமாக மாறிய ஸ்ருதி ஹாசன்.! என்னாச்சு அவருக்கு? 1

தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை சாந்தனு ஹசரிகா என்ற நபரை காதலித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி அவ்வபோது தனது ஆண் நண்பருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் ஆகியவற்றை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை, திருமணம் பற்றிய உங்களின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை, ஆனாலும் சாந்தனுவுடன் இருக்கும் நட்பு தொடரும் என்று கூறியிருந்தார். இருவரும் லிவ்விங் முறையில் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். தற்போது ஸ்ருதி வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவரின் முகம் கண்கள் உதடு பகுதிகள் வீங்கி காணப்படுகிறது. ஆளே மாறி போய் இருக்கிறார் ஸ்ருதி. காய்ச்சல் மற்றும் சைனஸ் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாகவும் இது தனக்கு ஒரு மோசமான நாள் என்றும் சரியான செல்பிக்களை மட்டும் ரசிக்கும் நீங்கள் இதோ இந்த புகைப்படத்தையும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். வித்தியாசமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள் என்ற ஹேஷ் டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

அவர் விரைந்து குணமாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Youtube Video Code Embed Credits: Polimer News

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்