தனலட்சுமி பத்தி என்கிட்ட கேக்காதீங்க.! தனலட்சுமியுடன் ஒப்பிட்டு கேட்ட கேள்விக்கு டென்ஷன் ஆன ஜூலி

பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்டுள்ள தனலட்சுமியை ஜூலியோடு ஒப்பிட்டு பேசியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் ஜூலி. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. பிக்பாஸில் கலந்து கொண்டு புகழ்பெற்றவர் ஜூலி. இவர் செவிலியராக இருந்தார். பின்னர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவர் பிரபலமானார். தற்போது இவர் செவிலியர் பணியை கைவிட்டு விட்டு படங்களின் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவரிடம் பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக இருக்கும் தனலட்சுமி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். பிக்பாஸில் கலந்து கொண்டு தற்போது பேசு பொருளாக இருப்பவர் தனலட்சுமி. பொதுமக்களில் இருந்து ஒருவராக அவர் உள்ளே சென்று இருக்கிறார்.

தனலட்சுமி பத்தி என்கிட்ட கேக்காதீங்க.! தனலட்சுமியுடன் ஒப்பிட்டு கேட்ட கேள்விக்கு டென்ஷன் ஆன ஜூலி 1

விளம்பரம்

21 வயதாகும் தனலட்சுமி ஆரம்பத்தில் டிக் டாக் செய்து வந்தார். இந்த முறை பொதுமக்களில் இருந்து ஒருவரை எடுப்பதாக கூறிய நிலையில், அதற்காக விண்ணப்பித்திருந்தார் தனலட்சுமி. அவருடைய விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டு, தற்போது ஒரு முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார். ஆரம்பம் முதலே சண்டை சச்சரவு என்று பலருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறார் தனலட்சுமி. இவருக்கு ரசிகர்களும் இருக்கிறார்கள். இவரை ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யும்போது அதிலிருந்து அவரது ரசிகர்கள் அவரை காப்பாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சமீபகாலமாக இந்த பிக்பாஸ் சீசன் 6ன் ஜூலிதான் தனலட்சுமி என்று பலரும் மீம்ஸ் போட்டு வந்த நிலையில், அது குறித்து தற்போது ஜூலியே ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

தொடர்புடையவை  BiggBoss போட்டியாளர்கள் VS பொதுமக்கள்..! வெளியான புதிய நிகழ்ச்சியின் ப்ரோமோ..!

தனலட்சுமி பத்தி என்கிட்ட கேக்காதீங்க.! தனலட்சுமியுடன் ஒப்பிட்டு கேட்ட கேள்விக்கு டென்ஷன் ஆன ஜூலி 3
அவரிடம் இது குறித்து கேட்டபோது, நீங்கள் சொல்லி தான் தனலட்சுமி உடன் என்னை ஒப்பிடுவதே எனக்கு தெரியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக நல்லவர்கள் கெட்டவர்கள் இருப்பார்கள். சில பேருக்கு என்னை பிடிக்கும் சில பேருக்கு என்னை பிடிக்காது. எல்லோருக்கும் நல்லவர்களாக நம்மால் இருக்க முடியாது. எனவே என்னோடு தனலட்சுமியை ஒப்பிட்டால் நல்லவிதமாக இருந்தாலும் சரி, கெட்ட விதமாக இருந்தாலும் சரி, அவர்கள் அவர்கள்தான் நான் தான். தற்போதைய பிக் பாஸ் என்கிற பெயரை கூட படிப்பதற்கு எனக்கு நேரமில்லை. அதனால் நான் இது போன்ற விஷயங்களை எல்லாம் கவனிப்பதே இல்லை என்று ஜூலி பதிலடி கொடுத்திருக்கிறார். அவரின் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Adhan Cinema

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment