மன்னிச்சிடுங்க..நான் சீரியலை விட்டு போறேன்..திடீரென ரோஜா சீரியலை விட்டு விலகிய சிபு..அர்ஜுன் கதாபாத்திரத்தில் குமரனா??

வெளியிட்டது

சன் டிவியில் ஒளிபரப்பாகும் மெகா தொடர்களுக்கு என்றே பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பல தொலைக்காட்சிகளில் மெகா தொடர்கள் ஒளிபரப்பாகும் போதும் சன் டிவி தொடர்களுக்கு என்று ரசிகர்கள் கூட்டம் இன்றும் இருக்கவே செய்கிறார்கள். அந்த வகையில் “ரோஜா” சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் அர்ஜூன் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக சிபு சூரியனும், ரோஜா கதாபாத்திரத்தில் ஹீரோயினாக பிரியங்கா நல்கரியும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சீரியல் தற்போது ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நாடகத்தில் வரும் கோர்ட் சீனுக்காகவே பலர் விரும்பி பார்பதுண்டு. வீடியோ கீழே உள்ளது 

மன்னிச்சிடுங்க..நான் சீரியலை விட்டு போறேன்..திடீரென ரோஜா சீரியலை விட்டு விலகிய சிபு..அர்ஜுன் கதாபாத்திரத்தில் குமரனா?? 1

சீரியலுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளதோ அதே அளவிற்கு இந்த சீரியலை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுவது உண்டு. படங்களில்தான் லாஜிக் ஓட்டைகள் இருப்பதாக கூறிவந்த நிலையில் அதற்கும் மிஞ்சி லாஜிக் ஓட்டைகளை நாடகத்தில் புகுத்தி விடுகின்றனர் நாடக இயக்குனர்கள். ஒரு வெற்றிகரமான திரைப்படத்தை எடுத்து அப்படியே அந்த சீன்களை வசனம் கூட மாற்றாமல் காப்பியடித்து வருகின்றனர். கதை இல்லையென்றால் நாடகத்தை முடித்துவிட்டு செல்லுங்கள் இப்படி ஜவ்வு போல் இழுக்காதீர்கள் என்று குடும்பத் தலைவிகளே குமுறுவதுண்டு. அது போல் ரோஜா சீரியலில் ஒரு முறை நடு ரோட்டில் அடிபட்டு கிடந்தவருக்கு முக மாற்று அறுவை சிகிச்சை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது கடுமையாக கேலி செய்யப்பட்டது. இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் ட்ரோல்ஸ் மற்றும் மீம்ஸை பறக்க விட்டனர்.

இப்படியே பல ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் இருந்து ஹீரோ சிபு சூரியன் விலகுவதாக அறிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள அவர், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து புதிய பயணத்தை தொடங்குவதால் ரோஜா சீரியலை விட்டு விலகுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். உங்களுடைய அன்பும் ஆதரவும் இல்லாவிட்டால் இன்று என்னை யாருக்கும் தெரியாது. உங்கள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றி, புது சீரியலில் தொடர உள்ளேன், இதே போல் உங்கள் அன்பும், ஆதரவும், ஆசீர்வாதங்களும் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது அர்ஜூன் கதாபாத்திரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. விரைவில் அதிகாரபூர்வ மாற்றம் பற்றி ரோஜா சீரியல் டீம் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது Watch the below Video

Youtube Video Code Embed Credits: Trend Talks

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்