நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ‘ரோஜா’ சீரியல் கதாநாயகன் சிபு சூரியனுக்கு கிடைத்த சீரியல் வாய்ப்பு.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ‘ரோஜா’ சீரியலின் ஹீரோவான சிபு சூரியனுக்கு தற்போது புது சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த முறை சன் தொலைக்காட்சியும் இல்லாமல், விஜய் தொலைக்காட்சியும் இல்லாமல் ஜீ தமிழுக்கு அவர் சென்றிருக்கும் தகவல் தற்போது கிடைத்திருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 'ரோஜா' சீரியல் கதாநாயகன் சிபு சூரியனுக்கு கிடைத்த சீரியல் வாய்ப்பு.! 1

‘ரோஜா’ சீரியல் மூலமாக மக்களின் மனம் கவர்ந்த நடிகராக இருந்தவர் சிபு சூரியன். இவர் கர்நாடகவைச் சேர்ந்தவர் என்ற போதிலும் தமிழ் மக்கள் இவருக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு கொடுத்து வந்தனர். அர்ஜுன் என்கிற கதாபாத்திரத்தில் சிபு சூரியனும், ரோஜா கதாபாத்திரத்தில் பிரியங்கா நல்காரியும் நடித்து வந்தனர். இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.


பின்னர் சிபு சூரியன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாரதிகண்ணம்மா’ சீசன் 2வில் நடித்து வந்தார். ஆனால் இந்த சீரியல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெறாத காரணத்தினாலும், டிஆர்பி யில் வாங்கிய பலத்த அடி காரணமாகவும் சில நாட்களிலேயே முடிவுக்கு கொண்டு வந்திருந்தனர். அதன் பின்னர் எந்த ஒரு சீரியலிலும் கமிட்டாகாமல் இருந்து வந்த சிபு சூரியனுக்கு தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிய வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இதில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘பேரன்பு’ போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை வைஷ்ணவி சிபுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

‘சிவமுருகன் டெக்ஸ்டைல்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியலின் ப்ரோமோ விரைவில் வெளியாக இருக்கிறது. இவர்களுடன் இணைந்து பசங்க சிவக்குமார், செம்பருத்தி சீரியல் பிரபலம் லட்சுமி, சுபிக்ஷா, பாலாஜி, சித்தார்த் போன்ற பல நடிக்க இருக்கின்றனர். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘பாக்கியலட்சுமி’ மற்றும் ‘வித்யா நம்பர் ஒன்’ போன்ற சீரியல்களை இயக்கிய சிவசேகர் இந்த சீரியலை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும், ப்ரோமோவும் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்