தமிழ் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். குறிப்பாக சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் விஜய் தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் சீரியல்கள் ஒன்றுக்கொன்று கடுமையான போட்டியை கொடுத்து வருகின்றனர். இதில் சன் தொலைக்காட்சியின் தொடர்கள் மற்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பின்னுக்குத் தள்ளி எப்போதும் டாப் ஒன் இடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மதியம் தொடங்கி இரவு வரை தொடர்ந்து சீரியல்களை ஒளிபரப்கி வரும் சன் தொலைக்காட்சியில், விரைவில் புது சீரியல் ஒன்று தொடங்க இருக்கிறது. இதில் ஜீ தமிழில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் ஒருவர் சன் தொலைக்காட்சிக்கு தாவ இருக்கும் செய்தி தற்போது கிடைத்திருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘பிரியாத வரம் வேண்டும்’, ‘பேரன்பு’ போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானவர் விஜய் வெங்கடேசன். தனது எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர் பட்டாளத்தை கவர்ந்திருக்கிறார்.

இந்த நிலையில் அவர் சன் தொலைக்காட்சிக்கு வர இருக்கிறார். சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ‘மல்லி’ என்கிற சீரியலில் அவர் நடிக்க இருக்கிறார். இந்த தொடரை சரிகமப நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அவருக்கு ஜோடியாக ‘சூரிய வம்சம்’ சீரியலில் நடித்த நடிகை நிகிதா, நடிக்க இருக்கும் செய்தி தற்போது கிடைத்திருக்கிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram