Categories: சினிமா

நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து காதலை உறுதி செய்த சித்தார்த்.!

வெளியிட்டது

சித்தார்த் தனது காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை முதல் முறையாக பகிர்ந்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான “பாய்ஸ்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் சித்தார்த். நடிப்பது மட்டுமில்லாமல் உதவி இயக்குநர், பாடகர், பிண்ணனி பேசுவது என்று பன்முக திறமையாளராக இருந்து வருகிறார் சித்தார்த். முதலில் இவர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனநராக பணியாற்றி வந்தார். பின்னர் முதல் படமே ஷங்கருடன் அமைந்தது. இந்த படம் பெரிய வெற்றியைக் கொடுத்தது. சாக்லேட் பாய் என்று இவருக்கு பட்டங்களும் அளிக்கப்பட்டது. பிறகு சித்தார்த் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியைக் கொடுக்கவில்லை.

நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து காதலை உறுதி செய்த சித்தார்த்.! 1

ஆயுத எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் NH4, தீயா வேலை செய்யனும் குமாரு, ஜிகர்தாண்டா போன்ற படங்களிலும் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் அருவம் என்ற படத்தில் நடித்தார். பிறகு தமிழில் எந்தவொரு படமும் சரியாக அமையவில்லை. மேலும் அவரின் படங்கள் மக்களிடையே சரியான வரபேற்பை பெறுவதில்லை. இதனால் சில நாட்களுக்கு முன்பு எனக்கு சரியான படங்கள் அமையவிலை என்றால் சினிமாத்துறையில் இருந்து விலக முடிவெடுத்து இருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

 

இந்த நிலையில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. காற்று வெளியிடை படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. பொன்னியின் செல்வன் பட ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு கூட இருவரும் ஒன்றாக காரில் வந்தனர். இந்த நிலையில் அதிதிக்கு இன்று 36வது பிறந்தநாள்.! அவர்களின் காதலை உறுதிப்படுத்தும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளனர். அதில் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு என் இதயத்தின் அரசிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். இதனால் இருவரும் காதலிப்பது உறுதியாகியுள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்