திரையுலகினர் இடையே இந்த வருடத்தில் மட்டும் ஏகப்பட்ட திருமணங்களின் நடைபெற்று முடிந்துள்ளது. வெள்ளித்திரை, சின்னத்திரை என்று ஏகப்பட்ட திருமணங்களை இந்த வருடத்தில் மட்டும் தமிழ் திரையுலகம் பார்த்துவிட்டது. குறிப்பாக நயன்தாரா விக்னேஷ் திருமணத்தை விட அதிகமாக பேசப்பட்ட ஒரு திருமணம் என்றால் அது ரவீந்தர் மகாலட்சுமி திருமணம் தான். ரவீந்தரை ஒரு தயாரிப்பாளராக அறிந்ததை விட, தற்போது தான் பலபேருக்கும் அவரைப் பற்றி தெரிய வந்துள்ளது. சில படங்களை தயாரித்திருக்கும், அவர் பிக்பாஸ் விமர்சனங்களை கூறித் தொடங்கிய பின்பு தான் பேமஸானார். குறிப்பாக வனிதாவுக்கும் அவருக்கும் நடந்த பிரச்சனை உலகம் அறிந்தது. இந்த நிலையில் அவர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

மகாலட்சுமிக்கும் இது இரண்டாவது திருமணம் தான். இருவரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி திருப்பதியில் வைத்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். திரையுலகினர் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. திருமணம் முடிந்து ஒரு போட்டோ மட்டுமே வெளியானது. திருமணம் முடிந்த பின்பு இருவரும் கோவில் கோவிலாக செல்வது, பின்னர் யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் பேட்டியளிப்பது. instagram-மில் புகைப்படங்களை பகிர்வது என்று மிக சந்தோசமாக வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் இவர்களது திருமணத்தை பலரும் விமர்சித்தனர். குறிப்பாக ரவீந்தரை பற்றி உருவ கேலி செய்தனர். ஆனால் தற்போது பலரும் இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தங்களை எதிர்ப்பவர்கள் கூட வாழ்த்து மறைவிற்கு தங்கள் வாழ்ந்து காட்டுவோம் என்று இருவரும் சபதம் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மனைவிக்கு கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார் ரவீந்தர் அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video.!