கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான “திருமணம்” என்னும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள்தான் சித்து – ஸ்ரேயா.
ஸ்ரேயா அஞ்சான் பெங்களூருவை சேர்ந்தவர். நடிக்கும் ஆர்வத்தில் சென்னை வந்த இவருக்கு சித்துவுடன் திருமணம் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கிய இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நாடகத்தில் இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக நடிக்கும் காட்சிகள் இவர்களது ரசிகர்களுக்கு நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இருவரும் செய்து கொண்டால் என்ன? என்று எண்ணும் அளவிற்கு இருந்தது. ரசிகர்களின் எண்ணங்களை ஈடேற்றும் வகையில் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

தற்போது சித்து விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் பார்ட் 2 வில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஆல்யா மானசா நடித்து வந்தார். இரண்டாவது முறை கர்ப்பமான ஆல்யா சீரியலை விட்டு விலகிவிட தற்போது ரியா என்பவர் சந்தியா கேரக்டரில் நடித்து வருகிறார். ஸ்ரேயா, ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் ரஜினி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து செய்யும் சின்ன சின்ன வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகும். இவர்கள் செய்யும் ரீல்ஸ், Vlogs போன்றவை பார்வையாளர்களை அள்ளும்.
சமீபத்தில் அரபிக் குத்து பாடலுக்கு இவர்கள் இருவரும் இணைந்து நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து இருந்தனர். விஜயை போலவே ஆடி கலக்கி இருந்தார் சித்து. அந்த ரீல்ஸ் மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருந்தது. தற்போது ஒரு Vlogs வீடியோவை வெளியிட்டுள்ளார் சித்து. அதில் ஸ்ரேயா தனக்கு முதல் முறையாக சமைத்து கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..
Youtube Video Code Embed Credits: Sidhu Shreya Youtube Channel