மங்களூருவில் மச்சினிச்சி வீட்டில் நடந்த கறி விருந்து.. ஸ்ரேயாவின் சொந்த ஊரில் கலாட்டா செய்த சித்து

வெளியிட்டது

சின்னத்திரை நட்சத்திர ஜோடிகளில் மிகப் பிரபலமானவர்கள் தான் சித்தார்த் மற்றும் ஸ்ரேயா. இவர்கள் இருவரும் கலர்ஸ் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானவர்கள் சந்தோஷ் என்ற கதாபாத்திரத்தில் சித்தார்த்தும், ஜனனி என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரேயாவும் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானார்கள். திரையில் இவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால் ரசிகர்கள் இவர்கள் இருவரையும் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தனர். இதனால் இரு வீட்டாரின் சம்மதத்துடன் சித்துவும் ஸ்ரேயாவும் திருமண பந்தத்தில் இணைந்தனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மங்களூருவில் மச்சினிச்சி வீட்டில் நடந்த கறி விருந்து.. ஸ்ரேயாவின் சொந்த ஊரில் கலாட்டா செய்த சித்து 1

மிக க்யூட் ஜோடிகளான இவர்கள் திருமணம் செய்து கொண்டது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது சித்துவும் ஸ்ரேயாவும் படு பிஸியாக நாடகங்களில் நடித்து வருகின்றனர். சித்து, ராஜா ராணி சீசன் 2 வில் விஜய் டிவியில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஸ்ரேயா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி என்ற தொடரில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இருவரும் இணைந்து youtube சேனல் ஒன்றை வைத்துள்ளனர்.அதில் பல ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் Vlogs வீடியோக்களை பதிவேற்றி வருகின்றனர்.

ஏதாவது ஒரு புது படம் வெளியானால் அந்த படத்தில் வருவது போலவே கெட்டப் போட்டு அந்தப் படத்தின் வைரல் பாடலுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவர். இது பல மில்லியன் பார்வையாளர்களை அள்ளும். தற்போது சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் ஷ்ரேயாவின் தங்கை வீட்டிற்கு விருந்துக்கு சென்றுள்ளனர். அந்த அழகான vlogஐ நீங்களும் பாருங்கள்..Watch the video below..

Youtube Video Code Embed Credits: Sidhu & Shreya

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்