அபிக்காக தனது தாயை எதிர்க்க துணிந்த வெற்றி.! அதிரடி திருப்பங்களுடன் தென்றல் வந்து என்னை தொடும் promo

தென்றல் வந்து என்னைத் தொடும் தொடரின் இந் வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு பக்கம் வெற்றி அபிக்கு ஆதரவாக தனது தாயையே எதிர்க்க முடிவு செய்திருக்கிறார். மறுபுறம் அபியோ பரமுவை குற்றவாளி என நினைத்துக் கொண்டு அவரை கைது செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இதனால் அடுத்து என்னென்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு இந்த சீரியலில் எழுந்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் தொடர் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் வெற்றி என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் வினோத் பாபுவும், அபி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை பவித்ரா ஜனனியும் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அபிக்காக தனது தாயை எதிர்க்க துணிந்த வெற்றி.! அதிரடி திருப்பங்களுடன் தென்றல் வந்து என்னை தொடும் promo 1

விளம்பரம்

தற்போது கதைப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளம்பெண்கள் தொடர்ந்து கடத்தப்படுகின்றனர். இதனால் கலெக்டராக இருக்கும் அபிக்கு தொடர்ந்து தலைவலி ஏற்படுகிறது. பெண்களை கடத்துபவர்கள் குறித்து வெற்றியும் ஒரு புறம் தீவிர விசாரணையில் இறங்குகிறார். அவருக்கு பெண்களை கடத்துபவர் ஒரு பெண் என்பது தெரிய வருகிறது. ஆனால் அபி பரமு என்பவரை கைது செய்து அவர்தான் குற்றவாளி என நினைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தற்போது இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமவில் வெற்றி தனது அண்ணனிடம் அபிக்கு தான் திருவிழாவில் முதல் மரியாதை வழங்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் அதற்கு நமது தாயார் சம்மதிக்க மாட்டார் என்று வெற்றியின் அண்ணன் பதில் கூறுகிறார்.

தொடர்புடையவை  மாங்குயிலே பாட்டுக்கு ஆண்டி கரகாட்டம் ஆட.. ஜிபி முத்து வாசிக்க.! ஆஹா என்ன ரகளை பண்ணுறாங்க.!

அபிக்காக தனது தாயை எதிர்க்க துணிந்த வெற்றி.! அதிரடி திருப்பங்களுடன் தென்றல் வந்து என்னை தொடும் promo 3

விளம்பரம்

ஆனால் வெற்றியோ நமது தாய்க்கு தெரியாமல் இது நடக்க வேண்டும. அபிக்கு பரிவட்டம் கட்டும் நிமிடம் வரை யாருக்கும் இந்த விஷயம் தெரிய கூடாது என்று கூறுகிறார் மறுபுறம் கபிலனும் திருவிழாவிற்கு வருகிறேன் என்று கூறுகிறார். ஆனால் அபியோ இல்லை வேண்டாம். பரமு விஷயம்தான் நமக்கு முக்கியம் அவனை கைது செய்து குற்றவாளி என நிரூபிக்க வேண்டும் என்று அபி பேசிக் கொண்டிருக்கிறார் இதனால் வெற்றி அபிக்கு ஆதரவாக தனது தாய்க்கு எதிராக திரும்பி இருப்பதாக தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment