சிறு வயதில் “I am little star…..ஆவேண்ட Superstar” என பாடியது முதலே தமிழக மக்களுக்கு சிம்புவை நன்கு அறியும். டி.ஆரின் மகனாக இருப்பினும் “காதல் அழிவதில்லை” படம் மூலம் 2002ஆம் ஆண்டு நாயகனாக அறிமுகமான பின் தனக்கென அவரே தனி பெயரை சம்பாதித்து வைத்துள்ளார். விரலை வெச்சு ஜாலம் காட்டியே சில காலம் மக்களை கவர்ந்த சிம்பு, கொஞ்ச நாட்களில் “மன்மதன்” படத்தில் நா விரலு வித்தக்காரன் மட்டும் இல்ல, நல்ல டைரக்டரும்’னு நிரூபிச்சாறு”

மன்மதன்ல பிளே பாய், கோவில்ல சாந்தமான பையனா, மன்மதன்ல பல்லனா, சிலம்பாட்டத்துல சீரிய சிம்பு, விண்ணைத்தாண்டி வருவாயா படத்துல ஒட்டுமொத்த தமிழ் திரைரசிகனையும் ரசிக்க வைத்தார். அப்பறோம் வானம், ஒஸ்தினு கெத்து காட்டிட்டு போன சிம்பு கொஞ்ச வெயிட் போய்ட்டாரு. போக போக ஆளு படம் நடிக்க ஷூட்டிங்குக்கு சரியான நேரத்துல வரதுல்ல, ரொம்ப தடவை ஆகுறாரு அப்படி இப்படினு “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படமே வரதுக்குள்ள ஒரு வழி ஆகிட்டாற்று. அப்போ பிரச்சனை பண்ணி அவருக்கு நடிக்கவே ரெட் கார்டும் போட்டாங்க”
நடுவுல இவரு “வந்தா ராஜாவதான் வருவேன்னு” வசனம் பேச எல்லாரும் கலாய்ச்சீட்டு இருந்தப்போ….முன்னாடி இருந்ததா விட இன்னும் ஸ்லிமா உண்மையிலே ராஜவவே வந்து நின்ரு மாநாட்டுல…கலாய்சவங்கலாலேயே பாராட்ட வாங்கி குவிச்சாரு, பழைய பார்முக்கு திரும்பியுள்ள சிம்பு இப்போ கவுதம் மேனன் கூட மறுவப்படியும் ஹாட்ரிக் ஹிட் குறிவெச்சு “வெந்து தணிந்தது காடு” படத்துல நடிச்சி முடிச்சிருக்காரு, கூடவே பத்துதல படமும் ரெடி ஆகிட்டு இருக்கு. ரெட் கார்ட் வாங்கிய அவருக்கு இப்போ UAE நாடு கூப்டு கோல்டன் விசா கொடுத்து அனுப்பிருக்காங்க.