சிறு குழந்தையாக அறிமுகமான முதல் இப்பொது வரை பலருக்கும் பிடித்த நடிகராக சிம்பு இருந்து வருகிறார். தயாரிப்பாளருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அவர் சில காலம் நடிப்பதற்கு ரெட் கார்டு பெற்று திரையுலகில் இருந்தும் காணாமல் போனார். உடல் எடை கூடுதல், ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு லைட்டாக வருவது என பல விமர்சனங்களும் இவர் மேல் வைக்கப்பட்டது.

அனைத்தையும் சரி செய்து, மீண்டும் பழைய சிம்புவாக லோக்கடவுனில் மாறி, வெங்கட் பிரபுவுடன் மாநாடு படத்தில் நடித்து வெற்றி பெற்றார். நீண்ட காலமாக அவருடைய ஒரு வெற்றி படத்திற்காக காத்திருந்த ரசிகர்கள் இந்த படத்தை தலையில் வைத்து கொண்டாடினர். கிட்டத்தட்ட படம் 50 கோடிக்கு மேல் ஷேர் கொடுத்து கடந்த ஆண்டின் மிக பெரிய வெற்றி படமாக ஆனது.
இப்போது “வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் மும்முரமாக மறுபடியும் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாகவே இவருடைய திருமணம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆரம்பத்தில் நயன்தாராவுடன் காதல், பின் ஹன்சிகா, கொஞ்ச நாட்கள் முன்பு நிதி அகர்வாலுடன் திருமணம் என பல செய்திகள் வந்தாலும் இதுவரை அவருக்கு இப்போது திருமணம் என்பது ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.
பல பெண் ரசிகர்களும் இவருக்கு திருமணம் செய்து கொள்ள தங்களுக்கு சம்மதம் என கூறியும் இப்பொது வரை அவர் யாருக்கும் சம்மதம் சொல்லவில்லை. இந்நிலையில் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகை ஸ்ரீநிதி நடிப்பிற்கு காட்டிலும் சர்ச்சைகளுக்கே பெயர் பெற்றுள்ளார். அண்மையில் வலிமை “படம் நல்லயில்ல” என கூறி அஜித் ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபத்திற்கும் ஆளானார். ஏதோ ஒரு தகராறில் இவருடைய அம்மா “நீ ஒரு நாள் நான் இல்லாம கஷ்ட படுவ” என திட்டி வீடியோ வெளியிட்டார். சில நாட்கள் முன்பு சிம்புவை திருமணம் செய்துகொள்ள எனக்கு சம்மதம் எனவும் கூறு விடியோக்கள் வெளியிட்டார்.
இவ்வாறு இருக்க இவர் இப்பொது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சிம்புவின் நடிப்பில் வெளியான “காளை” படத்தின் ஒரு பாடலை ரீல்ஸ் செய்து கீழே “எஸ்.டி.ஆர் எப்போ” என கேட்டு பதிவிட்டுள்ளார். இந்த அப்திவு இப்பொது வைரலாகி வருகிறது.