“பொன்னியின் செல்வன் படத்தை தூக்கி போட்ட சிம்பு….நயன்தாரா தான் காரணமா?”!!

வெளியிட்டது

தமிழ் திரையுலகின் முத்த இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் கதை படமாக பல நாயகர்களும் இயக்குனர்களும் போராடி உள்ளனர். எம்.ஜி.ஆர் ஆசைப்பட்ட இந்த கல்கியின் தொடர் பின்னர், புராதான கதைகளை கொண்டு படம் எடுத்து வரும் இயக்குனர் மணிரத்தினத்திற்கும் பெரிய ஆவல் இருந்தது.

"பொன்னியின் செல்வன் படத்தை தூக்கி போட்ட சிம்பு....நயன்தாரா தான் காரணமா?"!! 1

ஆனால் சில காரணங்களால் கைவிடப்பட்டு இப்பொது மீண்டும் மணிரத்னம் இயக்கத்திலேயே விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா என நட்சத்திர பட்டாளத்துடன் இந்த படம் தயாராகி வருகிறது. தமிழ் திரையுலகில் இருந்து பாகுபலிக்கு போட்டியாக உருவாகிறது என எதிர்பார்க்கும் பலருக்கும் இந்த படம் எடுக்க கஷ்ட பட்ட வரலாறு தெரியாது.

படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என்வும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஏற்கனவே பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்திலிருந்து முதல் பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு காலத்தில் காதல் ஜோடிகளாக தமிழ் திரையுலகில் வளம் வந்தவர்கள் நடிகர் சிம்புவும் நடிகை நயன்தாராவும். வல்லவன் படத்தில் துவங்கிய இவர்களது காதல் கதை சில ஆண்டுகளிலேயே முறிந்து போனது. இருப்பினும் இன்றளவும் கோலிவுட்டின் டாப் காதல் ஜோடிகள் லிஸ்டில் இருவருமே இருப்பார்கள். இப்போது கூட சிம்புவின் திருமண தள்ளிபோவதற்கு நயன்தாராவே காரணம் என இன்றளவு பலரும் பேசிவருகிறார்கள்.

பின்னர் இருவரும் இயக்குனர் பாண்டியராஜின் “இது நம்ம ஆளு” படத்தில் நடித்து இருந்தனர். ஆனாலும் காதல் முறிவிற்கு பின்னர் இருவருமே ஒருவரை ஒருவர் வெறுத்து வந்துள்ளனர். இப்பொது கார்த்தி நடித்துள்ள வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் முதல் விஜய் மற்றும் அடுத்து சிம்புவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தபட்டுள்ளது. ஆனால் சிம்பு ஒப்பந்தமாவதற்கு முன்பே நடிகை நயன்தாரா நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்ற காரணத்தால் சிம்பு இந்த படத்தை நிராகரித்ததாக செய்திகள் வெளிவந்தன.

ஆனால் உண்மையில் நயன்தாராவால் நடிகர் சிம்பு இந்த படத்தை வேண்டாமென கூறினார் என்றால் எவ்வாறு அவர் ஜோடியாகவே நயன்தாராவுடன் “இது நம்ம ஆளு” படத்தில் நடித்திருப்பார் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.  பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீஸர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Video Courtesy – Lyca Productions.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்