Categories: சினிமா

ஹாலிவுட்ல நடிச்சா பெரிய ஆளா? தனுஷை தாக்கி பேசினாரா சிம்பு? கொந்தளிக்கும் தனுஷ் ரசிகர்கள்

வெளியிட்டது

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் கோடிகளை குவித்து வருகிறது.
இதற்கிடையே சிம்பு விற்கும் தனுஷிற்கும் பிரச்சனை என்று சமீபத்தில் அவரது ரசிகர்கள் இணையத்தில் கடுமையாக மோதிக்கொண்டனர். திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில் எது மாஸ் என்று தனுஷ் பேசி இருப்பார். அவர் பேசும் பொழுது 10 பேரை அடிப்பவர் மாஸ் கிடையாது பெற்றோர்களை பார்த்து கொள்பவர் தான் மாஸ் என்று பேசியிருப்பார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மாஸ் கிளாஸ் என்றெல்லாம் நம்மை நாமே கூறிக்கொள்ள கூடாது. அதை மக்கள் தான் கூற வேண்டும் என்று சிம்பு பேசியிருந்தார். இதை மேற்கோள் காட்டிய ரசிகர்கள் திருச்சிற்றம்பலப்படவிழாவில் தனுஷ் பேசியதை தான் இவர் இவ்வாறு பேசுகிறார், தனுஷ் மீது இவர் வன்மத்தை கக்குகிறார் என்றெல்லாம் ட்விட்டரில் கடுமையாக மோதி கொண்டிருந்தனர். தற்போது மீண்டும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் சிம்பு தனுசை தாக்கும் விதமாக பேசியதாக ட்விட்டர் இணைய வாசிகள் புது புயலை கிளப்பி இருக்கிறார்கள்் அதில் பேசும் சிம்பு தான் ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்து விட்டால் ஒரு ஹாலிவுட் நடிகராக மாறிவிடுவேன். பிறகு அடுத்து என்ன நடக்கும் என்று கேட்கிறார்.

பெரிய ஆள் ஆக வேண்டும் என்று பலர் பேசுகிறார்கள் பெரிய ஆள் என்றால் என்ன என்று எனக்கு தெரியவில்லை நம் வேலையை நாம் ஒழுங்காக செய்தால் பெரிய ஆள் ஆகிவிடலாம் அதுவே நம்மை உயர்த்தும் என்றெல்லாம் பேசினார். சிம்புவின் இந்த பேச்சு தனுஷை தான் தாக்கி இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் கிளப்பி விட்டுள்ளனர். தனுஷ் சமீபத்தில் தி கிரேம் ஏன் ஹாலிவுட் படத்தில் நடித்த முடித்து இருந்தால் அதை மேற்கோள் காட்டி தான் சிம்பு இவ்வாறெல்லாம் பேசுகிறார் என்று ரசிகர்கள் மீம்ஸ்களை போடத் தொடங்கி விட்டனர். இதனால் மீண்டும் சிம்பு தனுஷ் ரசிகர்கள் மோதிக் கொண்டிருக்கின்றனர். சிம்பு குறித்து தனுசு ரசிகர்கள் மீம்ஸ் போட தொடங்கி இருக்கின்றனர். மேலும் சிம்பு வன்மத்தை கக்குகிறார் என்றும் பேச தொடங்கி இருக்கின்றனர்.

ஹாலிவுட்ல நடிச்சா பெரிய ஆளா? தனுஷை தாக்கி பேசினாரா சிம்பு? கொந்தளிக்கும் தனுஷ் ரசிகர்கள் 1

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்