கமலஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், தற்போது அவரை அறிமுகப்படுத்தி புது டீசர் ஒன்றை படக்குழு வீடியோவாக வெளியிட்டுள்ளது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் திரைப்படம் தான் தக் லைஃப். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாவது கட்டப் படிப்பிடிப்பு செர்பியாவிலும் நடைபெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் கமலஹாசன் மற்றும் திரிஷா ஆகியோர் கலந்து கொண்டனர். படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகி விட்டதாக அறிவிப்பு வெளியானது. அவருக்கு பதிலாக சிம்பு நடிக்க இருப்பதாகவும், டெல்லியில் தொடங்கியுள்ள அடுத்த கட்டப் படப்பிடிப்பில் சிம்பு மற்றும் கமலஹாசனுக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் சிம்பு அதிகாரப்பூர்வமாக படத்தில் இணைந்திருப்பதை படக்குழுவினர் உறுதி செய்து இருக்கின்றனர்.
காரில், கையில் துப்பாக்கி உடன் மாஸாக சிம்பு வந்து இறங்குவது போன்ற புது வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. இது சிம்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television