தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் பாடகர் கிருஷ் மற்றும் நடிகை சங்கீதா தம்பதிகள். இவர்களின் ஹோம் டூர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் உலகில் முன்னணி பாடகராக வலம் வந்து கொண்டிருப்பவர் பாடகர் கிருஷ். இவர் ‘அழகிய அசுரா’, ‘கோ’, ‘முப்பரிமாணம்’ உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். 2006ம் ஆண்டு ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வந்த ‘மஞ்சள் வெயில் மாலையிலே..’ என்கிற பாடலை பாடியதன் மூலமாக திரையுலகுக்கு பாடகராக அறிமுகமானார். அதன் பின்னர் ‘ஜூன் போனால் ஜூலை காற்றே’, ‘உனக்குள் நானே’, ‘ஜூன் ஜூலை மாதம்’, ‘அடியே கொல்லுதே’, ‘ஒரு சின்ன தாமரை’, ‘ரெட்டைக் கதிரே’ போன்ற பல நல்ல பாடல்களை தமிழ் திரையுலகத்திற்கு கொடுத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் பிறந்து வளர்ந்த பாடகர் கிருஷ் பின்னர் நியூயார்க் சிட்டியில் வளர்ந்தார் பின்னர் 2009ம் ஆண்டு நடிகையும் நடன கலைஞருமான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். திருவண்ணாமலையில் வைத்து நடைபெற்ற இந்த திருமணத்திற்கு நடிகர்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்தியிருந்தனர். இந்த தம்பதிகளுக்கு 2012 ஆம் ஆண்டு ஷிவ்யா என்கிற குழந்தை பிறந்தது. தனது மகளுடன் நேரம் செலவிடும் வீடியோக்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் கிருஷ். இளம் ஜோடிகளாக வலம் வரும் கிரிஷ் மற்றும் சங்கீதா தம்பதிகளின் ஹோம் டூர் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் ஹோம் டூர் வீடியோவை தற்போது கிருஷ் வெளியிட்டுள்ளார்.
வீடு முழுவதையும் தனித்துவமான மற்றும் அழகான பொருட்களால் அலங்கரித்து வைத்துள்ளார். இந்த கிரியேட்டிவ் அனைத்திற்கும் தனது மனைவி சங்கீதா தான் காரணம் என்று அவர் கூறியுள்ளார். கலர் முதல் கான்செப்ட் வரை அனைத்தையும் பார்த்து பார்த்து கட்டி இருப்பதாக க்ரிஷ் கூறியுள்ளார். மேலும் ஷோகேஸில் கிருஷும் சங்கீதாவும் இணைந்து வாங்கிய பல விருதுகளை அடுக்கி வைத்துள்ளனர். நீங்களும் அவர்கள் வீட்டின் ஹோம் டூர் வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video.!
YouTube Video Embed Code Credits: JSW – Just For Women