Categories: சினிமா

AR ரகுமானுக்கு பாடிய பின் இளையராஜா எனக்கு வாய்ப்பு தரவே இல்லை.! பாடகி மின்மினி வேதனை.!

வெளியிட்டது

ஏ ஆர் ரகுமான் இசையில் தான் பாடியதற்காக தனக்கு இளையராஜா அதற்கு பின்னர் வாய்ப்பே வழங்கவில்லை என்றும், ஸ்டுடியோவில் வைத்து தன்னை அவர் பேசிய பேச்சால் தான் அங்கேயே உடைந்து அழுததாகவும் பிரபல பின்னணி பாடகியாக இருந்த மின்மினி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள திரையுலகில் இருந்து தமிழ் திரையுலகை ஆக்கிரமித்த பாடகர்கள் பலர் இருக்கிறார்கள். அதுபோல தெலுங்கு துறையில் இருந்தும் வந்து தமிழ் திரையுலகை இன்றளவும் ஆட்டி படைக்கும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் மலையாளத்தில் இருந்து தமிழ் திரைத்துறைக்கு வந்து பாடல்களை பாடிய அருகில் ஒருவர் தான் மின்மினி. கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் ஸ்வாதகம் என்னும் திரைப்படத்தின் மூலமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் இளையராஜாவால் தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

AR ரகுமானுக்கு பாடிய பின் இளையராஜா எனக்கு வாய்ப்பு தரவே இல்லை.! பாடகி மின்மினி வேதனை.! 1
பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் மின்மினி பாடியிருக்கிறார். குறிப்பாக தமிழில் இவர் ஸ்வர்ணலதா உடன் இணைந்து இவர் பாடிய “மாசறு பொன்னே வருக” மற்றும் “அம்மன் கோவில் கும்பம் இங்கே” என்கிற இரண்டு பாடல்களும் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் பின்னர் இவர் மிகப்பெரிய அளவில் இடைவேளை எடுத்துக் கொண்டார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஏ ஆர் ரகுமான் இசையில் 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா என்கிற படத்தில் சின்ன சின்ன ஆசை என்கிற பாடலை பாடினார். முப்பது வருடங்களை கடந்த பின்பும் இந்த பாடல் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. இந்த நிலையில் மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கும் மின்மினி முதல் முறையாக இளையராஜா குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். ஏ ஆர் ரகுமானுக்காக சின்ன சின்ன ஆசை பாடிய பின்பு இளையராஜா தனக்கு பாடும் வாய்ப்பை நிராகரித்ததாக அவர் கூறியிருந்தார்.

சின்ன சின்ன ஆசை பாடலை ஏ ஆர் ரகுமானுக்காக பாடிய பின்னர் ஒருமுறை இளையராஜாவின் ஸ்டுடியோவிற்கு தான் சென்றதாகவும், அங்கு அவர் தன்னை பார்த்து அவர் வேறு ஒருவருக்கு தற்போது பாடத் தொடங்கி விட்டார் என்றும் தனக்கு பாடும் வாய்ப்பை நிராகரித்ததாகவும் கூறினார். அப்போது பின்னணி பாடகர் மனோ அங்கு இருந்ததாகவும் அவர் இந்த நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் தான் இளையராஜாவின் சொல்லை கேட்டு அந்த இடத்திலேயே உடைந்த அழுது போது மனோ தன்னை தேற்றியதாகவும் அவர் கூறியிருந்தார். பின்னர் தன்னால் பாட முடியாது என்று தான் தன்னுடைய ரெக்கார்டிங் அனைத்தையும் கேன்சல் செய்த போது, ஏ ஆர் ரகுமான் தனக்கு பச்சைக்கிளி பாடும் என்கிற பாடலை கருத்தம்மா படத்தில் இருந்து கொடுத்ததாக பேசினார். அவரது இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த செய்தியை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Polimer News

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்