Categories: சினிமா

காமெடியில் கலக்கி இருக்கும் மிர்ச்சி சிவா.! “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்” ட்ரைலர் இதோ.!

வெளியிட்டது

நீண்ட இடைவெளிக்கு பிறகு மிர்ச்சி சிவா நடித்துள்ள சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்கையை தொடங்கியவர் மிர்ச்சி சிவா. பின்னர் இவர் படங்களில் நடிக்கும் ஆர்வத்தின் காரணமாக படங்களில் நடித்து வருகிறார். சிவா முதன் முறையாக 2001 ஆம் ஆண்டு வெளியான 12B என்கிற படத்தில் நடிகர் ஷாமின் நண்பராக அறிமுகமானார். பின்னர் இவருக்கு 2007 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மறுபடியும் வெங்கட் பிரபுவுடன் இணைந்து சரோஜா படத்தில் நடித்தார். அதன் பின்னர் 2019 இவர் தமிழ் படம் என்கிற படத்தில் நடித்தார். இந்த படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவில் வந்த படங்களை கலாய்த்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் மூலமாக மிகப் பிரபலமாக அறியப்பட்டார் மிர்ச்சி சிவா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டள்ளது. 

காமெடியில் கலக்கி இருக்கும் மிர்ச்சி சிவா.! "சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்" ட்ரைலர் இதோ.! 1

அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு இவர் வணக்கம் சென்னை என்கிற படத்தில் பிரியா ஆனந்துடன் இணைந்து நடித்தார். காமெடி லவ் ஜனரில் இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியும் பெற்றிருந்தது. தற்போது இவர் “சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்” என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் காசேதான் கடவுளடா, சுமோ, சலூன், கோல்மால் போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்த நிலையில் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஷா எழுதி இயக்கி இருக்கும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் ஆகிய இருவர் நடித்திருக்கிறார்கள். பாடகர் மனோ முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவருடன் மாகாபா ஆனந்த் மொட்டை ராஜேந்திரன், கேபிஒய் பாலா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி ஜானரில் இந்த படம் உருவாகி இருக்கிறது.

இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கே குமார் தயாரித்திருக்கிறார். ஆர்தர் ஏ வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. படம் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது படத்தின் டிரைலரும் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ட்ரைலர் வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும். ! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Tips Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்