தமிழின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்த திரைப்படம் தான் வாத்தி. தற்போது இந்த திரைப்படம் மூன்று நாட்களில் எவ்வளவு வசூலித்தது என்பதை தற்போது அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனமே அறிவித்திருக்கிறது. 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்கிற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனவர் தனுஷ். இவர் கஸ்தூரி ராஜாவின் மகனும், செல்வராகவனின் தம்பியும் ஆவார். ஆரம்பத்தில் மிகவும் ஒல்லியாக இருந்ததால் பலராலும் உருவக் கேலி செய்யப்பட்ட நடிகர் தனுஷ், தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என அனைத்திலும் ஒரு கை பார்த்து வருகிறார். சமீப காலமாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அசுரன், கர்ணன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. இதில் திருச்சிற்றம்பலம் 100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றிருக்கிறது.

தற்போது தனுஷ் அடுத்தபடியாக வாத்தி என்கிற படத்திலும், கேப்டன் மில்லர் என்கிற படத்திலும் கமிட் ஆகி இருந்தார். இதில் வாத்தி திரைப்படம் தற்போது மூன்று நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்க சித்தாரா என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகி இருந்தது. தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் சார் என்றும் இந்த படம் உருவாகி இருந்தது. கல்வியை வியாபாரமாக பார்க்கும் பண முதலாளிகளுக்கும், எப்படியாவது அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்கிற நல்ல நோக்கில் பாடுபடும் ஆசிரியருக்கும் இடையில் நடக்கும் போராட்டமாக இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. நல்ல கருத்தை சொல்லும் கதைகள் தற்போது திரையில் திரைப்படங்களாக வெளிவந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் வாத்தி படமும் அது போன்ற ஒரு படமாக அமைந்திருந்தது.

இந்த நிலையில் வாத்தி படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வந்த நிலையில், தற்போது இந்த படத்தை தயாரித்த சித்தாரா என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனமே தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அவர்கள் மூன்று நாட்களில் 51 கோடி வசூலை வாத்தி திரைப்படம் பெற்றிருப்பதாக அறிவித்திருக்கிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். மூன்று நாட்களில் 51 கோடி என்றால் இந்த வாரத்தில் 100 கோடி வசூலை கட்டி மீண்டும் வசூல் நாயகன் தனுஷ் என்பதை நிரூபிப்பார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அடுத்து அடுத்து தனுஷ் படங்கள் வெற்றி பெறுவதால் தனுஷும் ஏகத்துக்கும் குஷியாக இருப்பதாக தெரிகிறது. அடுத்து அவர் கேப்டன் மில்லர் படத்தில் நல்ல கதைய அம்சத்துடன் கூடிய கதைகள் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Vaathi #SIR grosses 51 crores in just 3️⃣ days🔥
Best ever opening for our Star @dhanushkraja 🥳#Vaathi #SIR tops Monday's test results as expected 😎
'D' Rampage continues💥#VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 @SitharaEnts @7screenstudio pic.twitter.com/JxWtVZHujA
— Sithara Entertainments (@SitharaEnts) February 20, 2023