Categories: சினிமா

நடிகர் Vimal நடிக்கும் SIR படத்தின் ட்ரைலர் வெளியாகியது..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விமல். பல வெற்றிப்படங்களை கொடுத்து தேசிய விருது வரை வாங்கியுள்ளார். தற்போது இவருக்கு சரியான படங்கள் ஏதும் அமையாததால் வெற்றிக்காக போராடி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான விலங்கு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. தற்போது இவர் தேசிங்கு ராஜா படத்தில் நடித்து உள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

நடிகர் Vimal நடிக்கும் SIR படத்தின் ட்ரைலர் வெளியாகியது..! 1

இப்படத்தி தொடர்ந்து இவருக்கு அடுத்ததாக சார் படம் வெளியாக உள்ளது . இப்படத்தினை இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். விலங்கு படத்திற்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தினை வெளியிட உள்ளார். இதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது.

தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. இப்படம் வெற்றிபெற வேண்டும் என ரசிகர்கள் விமலுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed Video Credits : SSS picture

வெளியிட்டது

புதிய செய்திகள்