‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாக இருக்கிறது. அதில் முத்துவிற்கு வேலை போனது பற்றியும் ரோகினி வீட்டில் உள்ள அனைவரிடமும் போட்டுக் கொடுக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணாமலை, தற்போது அதிரடியான முடிவு ஒன்றை எடுக்கிறார் அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கிறது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல். இந்த சீரியலில் தற்போது கதைப்படி முத்து வேலை பார்த்து வந்த கார் ஓட்டுநர் வேலை அவரிடம் இருந்து பறிபோகிறது. இதை வீட்டில் சொல்லாமல் முத்து இத்தனை நாட்களாக மறைத்து வைத்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் முத்துவின் அண்ணன் மனைவி ரோகினி இந்த விஷயத்தை தற்போது வீட்டில் உள்ள அனைவரிடமும் போட்டு உடைத்து விடுகிறார். வீட்டில் அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மனோஜ் முத்துவிற்கு வேலை போனது பற்றி கிண்டலாக கூறுகிறார். அப்போது கோபமடைந்த மீனா, வேலை போன பின்பு மற்றவர்கள் போர் அவர் சும்மா உட்கார்ந்து வீட்டில் சாப்பிடவில்லை, அவர் அப்பார்ட்மெண்டில் ஒரு கார் துடைக்கும் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார். இதைக் கேட்ட அண்ணாமலை விஜயாவிடம் வீட்டுப் பத்திரத்தை கொடுக்குமாறு கேட்கிறார். அடுத்த நாளே அண்ணாமலை காரை மீட்டு முத்து கைகளில் கொடுக்கிறார்.
அதைப் பார்த்த முத்து நெகிழ்ந்து போய் அண்ணாமலைக்கு நன்றி சொல்கிறார். ஆனால் அண்ணாமலையோ எனக்கு எதற்காக நன்றி சொல்கிறாய்? நீ நன்றி சொல்ல வேண்டியது மீனாவுக்கு தான் என்று கூறுகிறார். அப்போது மீனா காரின் சாவியை வந்து முத்து கைகளில் கொடுக்கிறார். இத்தனை நாட்களாக எலியும், பூனையுமாக சண்டை போட்டு வந்த முத்துவும் மீனாவும் இனி ஒன்றாக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television