சின்னத்திரையில் சீரியல்களுக்கு என்ற தனி இடம் எப்பொழுதும் ரசிகர்களிடம் உண்டு. அந்த வரிசையில் சன் டிவி தொடங்கி தற்போது விஜய் தொலைக்காட்சி வரை பல நாடகங்களை ஒளிபரப்பி தனக்கான ரசிகர்களை வைத்து உள்ளனர். தற்போது சன்டிவியை போலவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமானது உருவாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தொடரின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், கிரிஷை கொலுவிற்கு கிருஷ்ணர் வேடத்தில் அழைத்து வந்து முத்து மற்றும் மீனா அழகு பார்க்கின்றனர். க்ரிஷ்ஷை பார்த்த ரோகிணி தன்னை மறந்து மகனை கட்டிப்பிடிக்கிறார். இதனை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அதே சமயம் கிரிஷை முத்து தத்தெடுக்க நினைக்கவே,
கடுப்பாகிய ரோகிணி அம்மா முத்தை அனைவரின் முன்னாலும் கண்டபடி திட்டி செல்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்கள் முத்துவிற்கு இதெல்லாம் தேவையா என திட்டி வருகின்றனர். இந்த ப்ரோமோ நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் அதிகரித்து உள்ளது.
Embed Video Credits : VIJAY TELEVISION