மக்களுக்கு பிடித்த பிரபல தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. குடும்பத்தில் நடப்பதை இயக்குனர் தத்ரூபமாக எடுப்பதால் இந்த தொடருக்கு இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தொடரில் நாயகன் மற்றும் நாயகியாக வரும் முத்து மீனாவுக்கு மிகப்பெரிய அளவு வரவேற்பினை இந்த தொடர் பெற்று கொடுத்து இருக்கிறது. தொடரின் ரசிகர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் உள்ளது எனலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

மீனாவின் நகையை விற்ற மனோஜால் தற்போது மிகப்பெரிய பிரச்சனை வீட்டில் வெடித்து உள்ளது. இதனால் முத்து மற்றும் மீனா அனைவரிடமும் சண்டையிட்டு வருகின்றனர். விஜயாவும் இந்த தவறுக்கு மனோஜிக்கு உடந்தையாக இருந்து வசமாக மாட்டி உள்ளார். இதனால் அண்ணாமலை செய்வதறியாது விழித்து கொண்டு உள்ளார்.
தற்போது புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் முத்து மனோஜை ஓடுகாளி என திட்டுகிறார். அதே சமயம் நகைகளை விஜயா மீனாவின் மீது எரிந்து செல்கிறார். இதனால் கடுப்பாகிய முத்து மீனாவை பார்த்து, அத்தை அத்தைனு சொன்னியே இப்போ பாரு என திட்டுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களின் எதிர்பார்ப்பினை சற்று அதிகமாக்கி இருக்கிறது.
Embed Video Credits : VIJAY TELEVISION