முத்து செல்போனை எடுக்க வந்து அறைக்குள் மாட்டிக்கொண்ட ரோகிணி..! பரபரப்பான சிறகடிகை ஆசை ப்ரோமோ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடரின் சுவாரசியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ப்ரோமோவில் சிட்டியின் பேச்சை கேட்டு, சத்யாவின் வீடியோவை முத்து செல்போனில் இருந்து எடுக்க வருகிறார் ரோகிணி. முத்து வெளியே செல்லும் நேரம் அவரது அறைக்குள் செல்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முத்து செல்போனை எடுக்க வந்து அறைக்குள் மாட்டிக்கொண்ட ரோகிணி..! பரபரப்பான சிறகடிகை ஆசை ப்ரோமோ..! 1

செல்போனை எடுத்து அவரது அறைக்குள் ஒழிந்து கிடந்தது தனது செல்போனுக்கு அனுப்புகிறார் ரோகிணி. அனுப்பும் சமயத்தில் போனில் சார்ஜ் தீர்ந்துவிடுகிறது. அதே சமயம் அறைக்குள் முத்து மற்றும் மீனா இருவரும் வருகின்றனர். அவர்களுக்கு பயந்து கட்டிலுக்கு அடியிலேயே ரோகிணி ஒழிந்து கிடக்கிறார். இதனால் அடுத்து என்ன ஆகும் என்ற பரபரப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டு உள்ளது.

இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரோகிணி வசமாக மாட்டிவிட்டார் இனி தப்பிக்கவே முடியாது என கருத்துக்களை கூறி வருகின்றனர். அங்கிருந்து ரோகிணி தப்பிப்பாரா அல்லது மாட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து இருக்கிறது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்