விளையாட்டா சொல்லுறாருனு நினச்சேன்..இப்பதான் அவரு வலி புரியுது.. நீயா நானா வைரல் தம்பதிகள் பேட்டி

நேற்று நீயா நானாவில் கலந்து கொண்டு வைரலான ஜோடிகள் தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியவர்கள் தான் சீனி ராஜா – பாரதி தம்பதிகள். இதில் பாரதி படித்து வேலைக்கு சென்று கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவியாவார். இந்த தலைப்பையே விவாதமாகக் கொண்டே நேற்றைய நீயா நானா நடந்தது. கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய பாரதி தனது கணவன் குறித்து சொன்ன சில விஷயங்கள் வைரலானது. அப்போது அவர் தனது மகளின் ரிப்போர்ட் கார்டை அவர் ஒரு மணி நேரமாக பார்த்துக் கொண்டிருப்பார். அதில் ஏபிசிடி தான் படித்துக் கொண்டிருப்பார் என்று அவர் கூறியது மிகவும் வைரலானது. இந்த வார்த்தை கூறிவிட்டு அவர் ஏளனமாக சிரித்தார். அப்போது கோபிநாத் உட்பட அரங்கில் இருந்த அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டா சொல்லுறாருனு நினச்சேன்..இப்பதான் அவரு வலி புரியுது.. நீயா நானா வைரல் தம்பதிகள் பேட்டி 1

விளம்பரம்

இதை விளக்கிய கணவர் சீனி ராஜா, தன்னால் எடுக்க முடியாத மதிப்பெண்களை தன் மகள் எடுக்கும் போது அதை ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டிருப்பதாக விளக்கம் அளித்தார். இந்த பதிலைக் கேட்ட கோபிநாத் அவரை பாராட்டி அவருக்கு சிறந்த தந்தை என்று பரிசளித்தார். படிப்பிற்கும் அறிவிற்கும் சம்பந்தம் இல்லை. மகிழ்ச்சியாக வாழ அறிவு தேவையில்லை என்று சீனிராஜாவின் மனைவிக்கு விளக்கினார். மேலும் சீனிராஜாவின் மகளை அழைத்து அந்த சிறுமி கையாலேயே அவருக்கு பரிசு வழங்கினார். அப்போது பேசிய அந்த சிறுமி என் தந்தை எனக்காகதான் கஷ்டப்படுகிறார், அவர் தோற்கவில்லை என்று கூறியது அனைவர் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. அந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த அனைவர் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

தொடர்புடையவை  கதிருக்கும், ராஜிக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த கோமதி.! பாண்டியனுக்கு தெரிஞ்சா என்ன ஆகுமோ?

விளையாட்டா சொல்லுறாருனு நினச்சேன்..இப்பதான் அவரு வலி புரியுது.. நீயா நானா வைரல் தம்பதிகள் பேட்டி 3

விளம்பரம்

தற்போது சீனி ராஜா – பாரதி தம்பதிகள் ஒரு தனியார் youtube சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். அதில் பேசிய அவர்கள் ஆரம்பத்தில் ஒரு கடை நடத்தி வந்த சீனு ராஜா தற்போது வேலையில்லாமல் இருக்கிறார். அதனாலேயே பாரதியின் தம்பி அவரிடம் பேசுவதில்லை என்று தெரிவித்தனர். மேலும் நீயா நானா நிகழ்ச்சியில் அவர் பேசிய பின்பு தான் அவருக்குள் இப்படி ஒரு சோகம் இருக்கிறது என்பதை தான் அறிந்து கொண்டதாகவும் பாரதி பேசினார். அவர்களின் முழு பேட்டியை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Mercury Digital

விளம்பரம்

Leave a Comment