விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் உள்ளது. பல இளைஞர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடராக இந்த தொடர் முன்னேறி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த தொடரில் சிறப்பாக நடிக்கும் நடிகர்கள் தான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ஈஸ்வரி , மீனாவிடம் தனக்கு உணவு எடுத்துக்கொண்டு வர சொல்லிவிட்டு நடனப்பள்ளிக்கு செல்கிறார். அங்கு உணவு கொண்டு செல்லும் போது,அங்கு பசியால் இருந்தவர்களுக்கு உணவை வழங்குகிறார் மீனா. இதனால் ஈஸ்வரிக்கு கடையில் உணவு வாங்கிக்கொண்டு அவருக்கு தெரியாமல் கொண்டு கொடுக்கிறார்.
அந்த உணவை சாப்பிட்ட ஈஸ்வரிக்கு உடல் சரியில்லாமல் போகிறது. அதே நேரத்தில் மீனா வீட்டில் உணவு சமைத்து இருப்பதை அண்ணாமலை உளறுகிறார். இதன்மூலம் தனக்கு வீட்டு உணவை மீனா கொண்டு வரவில்லை என்பதை ஈஸ்வரி தெரிந்துகொள்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.
Embed Video Credits : VIJAY TELEVISION