ரோகிணி கழுத்தில் தாலி கட்டிய மனோஜ்.! விபத்தில் சிக்கிய பிஏ.! வசமாக மாட்டிக்கொண்ட ரோகிணி.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது மனோஜ் மற்றும் ரோகிணி இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. ரோகிணியின் திருமணத்தை நிறுத்த வந்த பி.ஏவிற்கு தற்போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ரோகிணியின் கழுத்தில் தாலியை கட்டி தனது மனைவியாக்கி இருக்கிறார் மனோஜ். அந்த ப்ரோமோ தற்போது அதிரடியாக வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரோகிணி கழுத்தில் தாலி கட்டிய மனோஜ்.! விபத்தில் சிக்கிய பிஏ.! வசமாக மாட்டிக்கொண்ட ரோகிணி.! 1

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குறுகிய காலத்திலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்திருந்த ஒரு சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது மனோஜ் மற்றும் ரோகிணி திருமணம் நடைபெறுமா என்கிற பரபரப்பு எழுந்த நிலையில் இன்று திருமணம் நடைபெற்று உள்ளது.

ரோகிணிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் அதை மறைத்து தான் ஒரு பணக்காரி என்றும் தன்னிடம் வசதி வாய்ப்பு இருக்கிறது என்று ஏமாற்றி மனோஜை திருமணம் செய்ய திட்டமிடுகிறார். இதற்கு மனோஜின் தாயார் விஜயாவும் அடிபணிகிறார். ரோகிணிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கும் விஷயத்தை ரோகிணியின் கம்பெனியில் வேலை பார்த்த பி.ஏ என்பவர் மனோஜிடமும் மற்றும் அவரது குடும்பத்தினரும் தெரிவிப்பதற்காக காரில் வந்து கொண்டிருக்கிறார். பி.ஏ ஏற்கனவே ரோகிணியை ஒருதலையாக காதலித்து தனது இச்சைக்கு அடிபணிய வைக்க முயற்சிக்கிறார். ஆனால் ரோகிணி பி.ஏவின் மனைவியை அழைத்து வந்து அவரின் உண்மையான முகத்தை காட்டி அசிங்கப்படுத்தி அனுப்பி விடுகிறார். இதனால் ரோகிணி மீது பி ஏவுக்கு கடும் கோபத்தில் ஏற்படுகிறது.

தற்போது கதைப்படி ரோகிணியின் திருமணத்தை நிறுத்த காரில் பி.ஏ வந்து கொண்டிருக்கிறார். அந்த காரை மனோஜின் தம்பி முத்து ஓட்டிக்கொண்டு வருகிறார். காரில் அமர்ந்து கொண்டு ஒரு ரோகிணி பற்றி தவறாக பேசிக்கொண்டு வந்ததால் முத்து பி.ஏ வை அடித்து துவைக்கிறார்.

ஆனால் முத்துவுக்கு பிஏ ரோகிணி பற்றி தான் பேசிக் கொண்டு வருகிறார் என்பது தெரியாது. பெண்களை தவறாகப் பேசுவதால் முத்துவிற்கு கோபம் ஏற்பட்டு அவரை அடித்து துவைக்கிறார். முத்துவிடம் இருந்து தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள பயந்து ஓடும் பி.ஏ காரில் அடிபட்டு விபத்துக்குள்ளாகிறார். அவர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேலும் பி.ஏ சென்ற காரையும் அவர் போனிலிருந்து கடைசியாக ரோகிணிக்கு கால் சென்றதையும் போலீசார் கண்டுபிடிக்கின்றனர். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்