தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்று கோதை மற்றும் நடேசன் இருவரின் அறுபதாவது திருமண நாளுக்கு வரும் தமிழ் மற்றும் சரஸ்வதியை ராகிணி மிகவும் அசிங்கமாக பேசுகிறார். சோறு போட்டால் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் அழைக்காமலே கிளம்பி வந்துவிடுவீர்களா? என்று சொல்லி மிக அருவருக்கத்தக்க வகையில் தமிழை பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த நடேசன் தற்போது வந்து ராகிணியை திட்டி அவரை அனுப்பி விடுகிறார். அதை தற்போது ப்ரோமோவாக விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் மெதுவாக சென்று கொண்டிருந்த தமிழும் சரஸ்வதியும் தொடர் இப்போது தமிழ் சின்னத் திரையுலகின் டாப் ஹிட் தொடராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் தற்போது கோதை மற்றும் நடேசன் இருவருக்கும் 60-வது திருமணம் நடைபெற இருக்கிறது.
இந்த திருமணத்திற்கு தனது மூத்த மகன் தமிழ் மற்றும் அவரது மனைவி வரவேண்டும் என்று நடேசனும் இரண்டாவது மருமகள் வசுவும் விரும்புகின்றனர். இதற்காக வீட்டில் வைத்து நடக்க இருந்த நிகழ்ச்சியை கோவிலில் வைத்து நடத்த இருவரும் இணைந்து திட்டமிட்டனர். தற்போது அறுபதாவது திருமணத்திற்கு தமிழும் சரஸ்வதியும் இணைந்து வந்துள்ளனர். அவர்களை பார்த்த ராகிணி மிகவும் மோசமாக நடந்து கொண்டார். இலவசமாக சோறு கிடைத்தால் எங்கு வேண்டுமானாலும் வந்து விடுவீர்களா அழைக்காமலேயே எதற்காக இதற்கு வந்தீர்கள் என்று தமிழ் மற்றும் சரஸ்வதியை மிகவும் கேவலமாக பேசுகிறார். அப்போது அங்கு வரும் நடேசன் ராகிணியை கண்டிக்கிறார்.

கோவிலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் இவர்கள்தான் வரவேண்டும் இவர்கள் வரக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் எந்த தகுதியும் கிடையாது என்று சொல்லி ராகிணியை அடக்கி வைக்கிறார் நடேசன்.
மேலும் இவர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் இந்த விழாவை கோவிலில் வைத்து நடத்துகிறீர்கள் என்று ராகிணி கோபத்துடன் பேசுகிறார் இதை கண்டு தமிழும் சரஸ்வதியும் கூனிக் குறுகி போயிருக்க நடேசன் ராகிணியை வாயை மூடிக்கொண்டு உள்ளே செல்லுமாறு கூறுகிறார். அர்ஜுனை அழைத்து ராகிணியை உள்ளே அழைத்து செல்லுமாறு கூறுகிறார். இந்த புரோமோவை பார்த்த பலரும் ராகிணியைப் பார்த்தாலே எரிச்சலாக வருவதாக தற்போது கமெண்ட்களை போட்டு வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television