முத்து – மீனாவை வீட்டை விட்டு அடித்து துரத்திய விஜயா.! விஜயாவுக்கு அண்ணாமலை கொடுத்த ஷாக்.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் விஜயா, முத்து மற்றும் மீனாவை வீட்டை விட்டு வெளியேறும்படி கூற அதற்கு சம்மதிக்காத முத்து புது ஐடியா ஒன்றை செய்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ஸ்ருதிக்கு தாலி பிரித்துக் கோர்க்கும் நிகழ்வில் முத்துவிற்கும், ஸ்ருதியின் தந்தை வாசுதேவனுக்கும் சண்டை ஏற்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முத்து - மீனாவை வீட்டை விட்டு அடித்து துரத்திய விஜயா.! விஜயாவுக்கு அண்ணாமலை கொடுத்த ஷாக்.! 1
மீனாவை திருடி என வாசுதேவன் கூறியதால் கோபத்தில் ஸ்ருதியின் தந்தையை முத்து அடித்து துவைக்கிறார். இதனால் கடுப்பான ஸ்ருதி இனி நான் உங்கள் வீட்டிற்கு வரப் போவதில்லை என்று முடிவெடுக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் முத்து மற்றும் மீனா இருவரும் வெளியில் சென்றால்தான் ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் வீட்டிற்கு வருவார்கள். எனவே இவர்கள் வெளியே செல்ல வேண்டும் என்று விஜயா கூறுகிறார். அதற்கு முத்து மீனாவிடம் துணிமணிகளை எடுத்து வைக்கும்படி கூறிவிட்டு, அண்ணாமலையையும் தங்களுடன் வருமாறு அழைக்கிறார்.

அண்ணாமலையும் முத்துவுடன் கிளம்ப, விஜயா எதற்காக நீங்களும் கிளம்புகிறீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு என் மகன் அழைக்கிறான் எனவே நான் அவனுடன் செல்ல போகிறேன் என்று விஜயாவிற்கு அண்ணாமலை தரமான பதிலடி கொடுக்கிறார். இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விஜயா முழித்துக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்