நாதஸ்வரம் சீரியல் கோபியின் தங்கைகளை ஞாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ சீரியலில் நடித்த நடிகைகள் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒன்றாக இணைந்து இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நாதஸ்வரம் சீரியல் கோபியின் தங்கைகளை ஞாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காங்கன்னு பாருங்க..! 1

விளம்பரம்

90 காலகட்டத்தில் இருந்தே சீரியல்கள் என்றாலே அது சன் தொலைக்காட்சி தான். இன்று பல தொலைக்காட்சிகள் சீரியல்களை ஒளிபரப்பி வரும்போதும், மற்ற தொலைக்காட்சிகளின் தொடர்களை பின்னுக்குத் தள்ளி, டிஆர்பி ரேட்டில் முதல் இடம் பிடித்து வருகிறது சன் தொலைக்காட்சியின் சீரியல்கள்.

நாதஸ்வரம் சீரியல் கோபியின் தங்கைகளை ஞாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காங்கன்னு பாருங்க..! 3

விளம்பரம்

 

அந்த வகையில் ஆயிரம் எபிசோடை கடந்து கின்னஸ் ரெக்கார்டு படைத்த ஒரு சீரியல்தான் நாதஸ்வரம். இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்த இந்த நாடகம் இன்றளவும் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் கோபியின் தங்கைகளாக நடித்தவர்கள் தான் ரேவதி, பென்சி, ஜெயஸ்ரீ, ஸ்ருதி சண்முகப்பிரியா, சங்கவி.

விளம்பரம்

நாதஸ்வரம் சீரியல் கோபியின் தங்கைகளை ஞாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காங்கன்னு பாருங்க..! 5

இவர்கள் ஐந்து பேரும் மகேஸ்வரி, காமு, பரமு, ராகினி, கீதா என்கிற கதாபாத்திரத்தில் இந்த நாடகத்தில் நடித்து வந்தனர். தனது அண்ணனை எங்கும் விட்டுக் கொடுக்காமல், புகுந்த வீட்டிலும் விட்டுக் கொடுக்காமல் அண்ணனுக்கு எல்லா இடத்திலும் சப்போர்ட் செய்யும் தங்கைகளாக நடித்து பட்டையை கிளப்பியிருந்தனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  இது என்ன காபி இவ்ளோ கன்றாவியா இருக்கு.! ராதிகாவை பங்கம் செய்யும் ராமமூர்த்தி தாத்தா.!

நாதஸ்வரம் சீரியல் கோபியின் தங்கைகளை ஞாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காங்கன்னு பாருங்க..! 7

 

விளம்பரம்

தற்போது இந்த சீரியல் கலைஞர் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் இதில் சகோதரிகளாக நடித்த நான்கு பேர் மீண்டும் இணைந்துள்ளனர்.

நாதஸ்வரம் சீரியல் கோபியின் தங்கைகளை ஞாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காங்கன்னு பாருங்க..! 9

விளம்பரம்

பல வருடங்களுக்கு பின்னர் இணைந்து அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படங்களை பார்த்த பலரும் ஒரு வேளை நாதஸ்வரம் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறதோ? என்கிற தங்களது ஆவல்களை யூகங்களாக வெளிப்படுத்தி வருகின்றனர்.!

விளம்பரம்

Leave a Comment