பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் முறையாக நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கிறார் மாயா. அந்த பதிவின் தன்னுடைய மாயா ஸ்குவார்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். மாடல், நடிகை, தியேட்டர் ஆர்டிஸ்ட், பாடகி என பன்முகத் திறமையாளராக வலம் வருபவர் மாயா கிருஷ்ணன். இவர் ‘வானவில் வாழ்க்கை’ என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் ‘தொடரி’, ‘சர்வர் சுந்தரம்’, ‘மகளிர் மட்டும்’, ‘வேலைக்காரன்’, ‘எந்திரன் 2.0’, ‘விக்ரம்’, ‘லியோ’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் நடித்து வருகிறார். தியேட்டர் கலைஞராக நூறுக்கும் மேற்பட்ட மேடைகளில் அவர் தோன்றி தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இவருக்கு பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பம் முதலே மாயா மீது பலரும் விமர்சனங்களை கூறி வந்தனர். மாயாவை வெளியேற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து விஜய் டிவிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் கமல் மற்றும் விஜய் டிவி ஆதரவால் அவர் இறுதி வரை வந்துவிட்டதாகவும் நெட்டிசன்கள் குற்றம் சாட்டு வந்தனர். ஆனால் இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு மாயா இந்த சீசனின் மூன்றாவது ஃபைனலிஸ்டாக தேர்வானார். வெளியே வந்த பின்னர் அவர் முதல் முறையாக பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில், “என் மீது நீங்கள் பொழியும் அன்பிற்கு மிக்க நன்றி. என்னுடைய பிழையை நீங்கள் பொறுத்துக் கொண்டீர்கள். அன்புமழையில் என்னை நனைய வைத்து விட்டீர்கள். நீங்கள் காட்டும் கட்டுக்கடங்காத அன்பு என் நெஞ்சில் எப்போதும் நிறைந்திருக்கும்.

அந்த 105 நாட்கள் என் மரணப் படுக்கையிலும் மறக்காது, உங்களுக்காகத்தான் வேலை பார்க்கப் போகிறேன். எல்லாமே உங்களுக்காக தான். நீங்கள் எப்போதும் எனக்கானவர்கள், என்னுடையவர்கள். என்னுடைய சண்டைகள் எல்லாம் எனக்காக நீங்கள் சண்டை போட்டு இருக்கிறீர்கள். அதற்கு இறுதி வரை நன்றியுடன் இருப்பேன். எனக்கு ஒரே ஒரு ஆசை. என் ரசிகராக நீங்கள் இருந்தால் என்னை மட்டும் ரசியுங்கள். மற்றவர்களையும் ரசிங்கள். ஆனால் ஒருவரை வெறுக்காதீர்கள். என்னை வெறுப்பவர்களாக இருந்தாலும் கூட அவர்களை வெறுக்க வேண்டாம். வேணும்னா காதலிங்க. போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் போய் நம்ம வேலையை பார்க்கலாம்.

நான் உங்களுக்கு சத்தியம் செய்து கொடுக்கிறேன், சந்திப்போம், அன்புடன், பூவுடன் மாயகிருஷ்ணன்” என்று பதிவிட்டு இருக்கிறார் அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram