மண்டபத்தில் நடந்த உண்மைகளை தெரிந்துகொண்டு மனம் மாறும் ஸ்ருதி.! ப்ரோமோ இதோ

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஸ்ருதியை மீண்டும் வீட்டிற்கு வருமாறு மீனா கெஞ்சி கொண்டிருக்கிறார். அதே சமயம் ரவியை மீண்டும் வீட்டிற்கு வருமாறு முத்து ஒருபுறம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தில் நடந்த உண்மைகளை தெரிந்துகொண்டு மனம் மாறும் ஸ்ருதி.! ப்ரோமோ இதோ 1

திருமண மண்டபத்தில் ஸ்ருதியின் மாலையில் கிடந்த செயினை எடுத்துக் கொடுக்க மீனா முயன்ற போது, ஸ்ருதியின் தந்தை அதை தவறாக புரிந்து கொண்டு மீனாவை திருடி என்று மிகவும் அசிங்கப்படுத்துகிறார். இதனால் முத்து ஸ்ருதியின் தந்தையை அடிக்கிறார். ஆனால் இந்த விஷயம் எதுவுமே ஸ்ருதிக்கு தெரியவில்லை. முத்து ஸ்ருதியின் தந்தையை அடித்ததை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, அவர் வீட்டில் இருந்து வெளியேறி விடுகிறார். ரவியும் ஸ்ருதியுடன் வீட்டிலிருந்து வெளியேறுகிறார்.


இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், ஸ்ருதியை சந்திக்கும் மீனா, உங்கள் தந்தை என்னை மிகவும் மோசமாக நடத்தினார். ‘திருடி’ என்று சொன்னார். என் குடும்பத்தையே திருட்டுக் குடும்பம் என்று சொன்னார். அதனால்தான் முத்து அவ்வாறு நடந்து கொண்டார். தயவு செய்து எனக்காக மீண்டும் வீட்டிற்கு வாருங்கள் என்று கைகூப்பி வேண்டிக் கொண்டிருக்கிறார். இதனால் ஸ்ருதியின் மனமும் மாறுகிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்