விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தமிழால் தான் தனது கணவர் அர்ஜுன் கோமாவிற்கு சென்று விட்டதாக கூறிய ராகிணி கடுமையான வார்த்தைகளில் தமிழ் மற்றும் சரஸ்வதியை திட்டுகிறார். இப்படிப்பட்ட பாவத்தை செய்த உனக்கு குழந்தையை பிறக்காது என்று சொல்லி அவர் மோசமான வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார். இதனால் தமிழ், சரஸ்வதி, கோதை என ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரில் தற்போது கதைப்படி அர்ஜுனனின் அக்கா கணவர் அர்ஜுன் தலையில் ஓங்கி அடித்து அவரை கோமா நிலைக்கு செல்லும்படி செய்து விட்டார்’ ஆனால் ராகிணியோ தமிழ் சரஸ்வதியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் வைத்து தலையில் அடித்ததால் தான் அவர் கோமாநிலைக்கு சென்று விட்டதாக தமிழிடம் சென்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். தமிழைப் பார்த்து இப்படி பாவப்பட்ட செயலை செய்ய உனக்கு எப்படி மனம் வந்தது? அந்த ஆண்டவன் உனக்கு எப்படி குழந்தையை கொடுப்பார் என்று கேட்கிறார்.

ராகிணியின் இந்த வார்த்தைகளை கேட்டு கோதை மற்றும் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நிற்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. பலரும் ராகிணியை கமெண்ட்களில் திட்டி தீர்த்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television