விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது விஜயாவின் மூத்த மகன் ரோகிணி கர்ப்பமாக இருப்பதாக விஜயா மகிழ்ச்சி செய்தியை கூறுகிறார். ஆனால் மனோஜோ ரோகிணி சொல்வது உண்மை இல்லை என்பது போல அவரை சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சிக்காக ரோகிணியின் தந்தையை வரச்சொல்லி விஜயா, ரோகிணியை மிகவும் கட்டாயப்படுத்துகிறார். ஆனால் ரோகிணியின் தந்தை வரவில்லை. ரோகிணி செய்திருந்த திட்டமும் சொதப்பிவிட்டது. எனவே விஜயா தொடர்ந்து ரோகிணியிடம் கேள்வி மேல் கேள்வி மேல் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று சாப்பிட்டுக் கொண்டிருந்த ரோகிணிக்கு திடீரென வாந்தி வருகிறது.
அதை தவறாக புரிந்து கொண்ட விஜயா, ரோகிணி கர்ப்பமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு அனைவருக்கும் இனிப்பு கொடுக்கிறார். தனது தந்தை விஷயத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு ரோகிணி கர்ப்பமாக இருக்கும் நாடகத்தை கூட நடத்தக்கூடும். ஆனால் மனோஜ்க்கு ரோகிணி சொல்வதில் உண்மை இல்லை என்பது போல அவரை சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television