விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது விஜயா சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கிறார். அவரை சாப்பிட வைப்பதற்காக முத்து முயற்சி செய்து பிரியாணி வாங்கி வந்து விஜயாவை சாப்பிட வைக்கிறார். பின்னர் மீனாவிடம் அவர் தனது தாய் குறித்து உருக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நெகழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ருதியின் தாலி பிரிப்பு கோர்ப்பு நிகழ்ச்சியில் நடந்த சண்டையில் ஸ்ருதி கோபித்துக் கொண்டு அவர்களது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். ரவியும் ஹோட்டலிலேயே தங்கி விடுகிறார். இதனால் விஜயா மற்றும் அண்ணாமலை இருவரும் ரவி மற்றும் ஸ்ருதியை தேடி தவித்து வருகின்றனர். இருவரையும் எப்படியாவது வீட்டிற்கு அழைத்து வரவேண்டும் என்று முத்துவும், மீனாவும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். இதனால் விஜயா சாப்பிடாமல் வீட்டில் உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கிறார். அவரை சாப்பிட வைக்க முத்து பிரியாணியை வாங்கி வந்து கொடுக்கிறார்.
அப்போது மீனா உங்கள் அம்மா ஒரு நாள் கூட நீங்கள் சாப்பிட்டீர்களா? என்று கேட்டதில்லை. ஆனால் அவருக்காக இவ்வளவு தூரம் செய்கிறீர்களே? என்று கேட்க,எனக்கு முதல் முறை உணவு ஊட்டி வரை அவர்தான் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். இதை பார்க்கும் மீனா கண் கலங்குகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television